Asianet News TamilAsianet News Tamil

மத்திய அரசு நிறுவனத்தில் எக்கச்சக்க வேலைவாய்ப்பு! 1764 காலிப் பணியிடங்களுக்கு இப்பவே அப்ளை பண்ணுங்க!

சுற்றுச்சூழல், நிதி, சட்டம், சிவில், மெக்கானிக்கல், மார்க்கெட்டிங், மக்கள் தொடர்பு என 16 வெவ்வேறு பிரிவுகளில் காலிப் பணியிடங்கள் இருக்கின்றன.

Coal India Recruitment 2023 Apply for 1764 Executive Cadre Vacancies
Author
First Published Aug 24, 2023, 2:49 PM IST

இந்தியாவின் முக்கியமான பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று கோல் இந்தியா லிமிடெட். இந்நிறுவனத்தின் கீழ் செயல்படும் மகாரத்னா நிறுவனத்தில் 1,764 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த வேலைக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சுற்றுச்சூழல், நிதி, சட்டம், சிவில், மெக்கானிக்கல், மார்க்கெட்டிங், மக்கள் தொடர்பு என 16 வெவ்வேறு பிரிவுகளில் காலிப் பணியிடங்கள் இருக்கின்றன.

காலிப் பணியிடங்கள்:

இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் 16 பிரிவுகளின் கீழ் 1764 எக்ஸிகியூட்டிவ் கேடர் (Executive Cadre) பணியிடங்கள் காலியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கல்வித் தகுதி:

அங்கீகாரம் பெற்ற பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து கல்வித்தகுதி மாறுபடுகிறது.

வயது வரம்பு:

வயது வரம்பும் வெவ்வேறு பணியிடங்களுக்கு ஏற்ப வேறுபடும். பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடும் வழங்கப்படும். விரிவான தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் காணலாம்.

Coal India Recruitment 2023 Apply for 1764 Executive Cadre Vacancies

தேர்வு முறை:

இந்தத் தேர்வு 200 மதிப்பெண்களுக்கு ஆன்லைன் மூலம் நடத்தப்படும். இந்தத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியான நபர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம்:

இந்தப் பணியினங்களுக்கு மாத ஊதியம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த வேலைவாய்ப்புக்கான விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 4ஆம் தேதி தொடங்கியது. இந்த அவகாசம் செப்டம்பர் 2ஆம் தேதி முடிகிறது. விருப்பமும் தகுதியும் கொண்டவர்கள் இந்த காலக்கெடுவுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/84628/Registration.html

இந்த வேலைவாய்ப்பு பற்றிய கூடுதல் விவரங்களை அறிய https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/84628/Index.html என்ற பக்கத்திற்குச் சென்று பார்க்கலாம். +91 9513632564 என்ற எண்ணைத் தொடர்புகொண்டும் உதவி பெறலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios