10வது பாஸ் பண்ணவங்களுக்கு மத்திய அரசில் வேலை... விண்ணப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே!!
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியாக உள்ள பணியிடங்களுக்கான ஆள் சேர்ப்பு அறிவிப்பை (SSC - ADVERTISEMENT NO. Phase-XI/2023/Selection Posts) மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் கீழ் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் அமைப்புகளில் உள்ள 549 பிரிவுகளின் கீழ் 5,369 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், 100 பிரிவுகள் பட்டப்படிப்பு (Graduation and Above) நிலையிலும், 169 பிரிவுகள் (10+2 Higher Secondary )மேல்நிலைப்பள்ளி நிலையிலும், 280 பிரிவுகள் மெட்ரிக் பள்ளி நிலையிலும் (Matriculation) நிரப்பப்பட உள்ளன.
இதையும் படிங்க: தமிழகத்தில் அக்னிவீர் ராணுவ ஆட்சேர்ப்பு... விண்ணப்பிப்பது எப்படி? கடைசி தேதி எப்போது? விவரம் உள்ளே!!
விண்ணப்பிப்பது எப்படி?
- விண்ணப்ப செயல்முறை கடந்த 6 ஆம் தேதி முதல் தொடங்கியது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ssc.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
கடைசி தேதி:
- மார்ச்.27 ஆம் தேதி நள்ளிரவு 11 மணி வரை மட்டுமே இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க முடியும்.
விண்ணப்பக் கட்டணம்:
- விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.
- அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த பெண்கள், எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய செய்தி.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
தேர்வு செய்யும் முறை:
- கணினி அடிப்படையில் நடைபெறும் தேர்வின் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டு தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விவரங்களுக்கு:
- கல்வித் தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களுக்கு https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_rhq_06032023.pdf என்ற லிங்கை கிளிக் செய்து அறிந்துக்கொள்ளலாம்.