தமிழகத்தில் அக்னிவீர் ராணுவ ஆட்சேர்ப்பு... விண்ணப்பிப்பது எப்படி? கடைசி தேதி எப்போது? விவரம் உள்ளே!!
இந்திய ராணுவத்தில் அக்னிபாத் திட்டம் மூலம் ஆட்சேர்ப்பு செயல்முறை தொடங்கியுள்ளதை அடுத்து தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தில் அக்னிபாத் திட்டம் மூலம் ஆட்சேர்ப்பு செயல்முறை தொடங்கியுள்ளதை அடுத்து தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தில் அக்னிபாத் திட்டம் மூலம் ஆட்சேர்ப்பு செயல்முறை தொடங்கியுள்ளது. இந்த பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து விளக்கம் அளித்துள்ள ராணுவ ஆட்சேர்ப்பு இயக்குனர் தீபக் குமார், அக்னிவீர் திட்டத்திற்கான ஆட்சேர்ப்பு மயிலாடுதுறை முதல் கன்னியாகுமரி வரையிலான 16 தென்மாவட்டங்களில் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு.... விண்ணப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே!!
இதில் கலந்துக் கொள்ள விரும்பும் இளைஞர்கள் மார்ச் 15 ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். ஆட்சேர்ப்பு பதிவு ஆன்லைன் வழியாக மட்டுமே செய்யப்படுகிறது. இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். தற்போது ஆட்சேர்ப்பு தேர்வு முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 10ம் வகுப்பு படித்தால் போதும்.. மாதம் ரூ.15,000 சம்பளத்தில் காத்திருக்கிறது தமிழக அரசு வேலை !!
முன்னதாக, ஆட்சேர்ப்பு நடைமுறையில், உடற்தகுதித் தேர்வு, மருத்துவ பரிசோதனை இறுதியாக எழுத்துத் தேர்வு நடைபெறும். ஆனால் இனிமேல், முதலில் ஆன்லைன் வழியாக எழுத்துத் தேர்வு நடைபெறும், அதனைத் தொடர்ந்து உடற்தகுதி தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.