முதுநிலை படிப்புகளுக்கு கல்வி உதவித்தொகை.. கால அவகாசத்தை நீட்டித்த ஏஐசிடிஇ - முழு விபரம் !!
முதுநிலை படிப்புக்கான கல்வி உதவித்தொகை பெற விரும்புபவர்கள் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஏஐசிடிஇ வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமத்தின் (ஏஐசிடிஇ) உறுப்பினர் செயலர்ராஜீவ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் கேட் அல்லது ஜிபிஏடி நுழைவுத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு மாதம்தோறும் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க;- சொன்ன நம்பமாட்டீங்க.. மாதம் ரூ.69,000 சம்பளம் .. 10, 12 முடித்தாலே போதும்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!
பொறியியல், தொழில்நுட்பம், கட்டிடவியல், பார்மசி ஆகிய படிப்புகளில் முதுநிலை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதி பெறும் மாணவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம்தோறும் ரூ.12,400 உதவித் தொகையாக வழங்கப்படும். பகுதி நேரம், தொலைதூர அடிப்படையில் முதுநிலை படிப்பு படிப்பவர்கள் உதவித்தொகை பெற முடியாது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த மாதம் தொடங்கி நடந்து வருகிறது.
இதையும் படிங்க;- ஆண்டுக்கு ரூ 19.50 லட்சம் சம்பளம்..? எஸ்.பி.ஐ வங்கியில் வேலை..! விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது தெரியுமா..?
பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் டிசம்பர் 31 தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. உதவித்தொகை பெற விரும்புவோர் https://pgscholarship.aicteindia.org என்ற வலைதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை https://www.aicte-india.org என்ற தளத்தில் அறிந்துகொள்ளலாம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.