Paytm-ல மூவி டிக்கெட் புக் பண்ணுறீங்களா.? இனி Zomoto-லயும் புக் செய்யலாம்!
பேடிஎம் நிறுவனத்தின் மிகவும் இலாபகரமான பிரிவுகளில் ஒன்றான பொழுதுபோக்கு டிக்கெட் வணிகத்தை, உணவு விநியோக செயலியான Zomato வாங்க உள்ளது. ஆகஸ்ட் 21 ஆம் தேதி, Zomato நிறுவனம் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. zomoto நிறுவனம் Paytm Entertainment Ticketing Business-ஐ சுமார் ரூ.2048 கோடி விலைக்கு வாங்குகிறது.
பேடிஎம் நிறுவனத்தின் மிகவும் இலாபகரமான பிரிவுகளில் ஒன்றான பொழுதுபோக்கு டிக்கெட் வணிகத்தை, உணவு விநியோக செயலியான Zomato வாங்க உள்ளது. ஆகஸ்ட் 21 ஆம் தேதி, Zomato நிறுவனம் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன் இயக்குநர்கள் குழு பேடிஎம் நிறுவனத்தின் இந்த வணிகத்தை கையகப்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. 2048 கோடி ரூபாயில் இந்த ஒப்பந்தம் நடைபெறுகிறது. ஃபின்டெக் நிறுவனமான பேடிஎம் அதன் கட்டணம் மற்றும் நிதி சேவைகளில் கவனம் செலுத்த உதவும்.
இந்த ஒப்பந்தத்தில் சினிமா, விளையாட்டு மற்றும் நேரடி நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட் முன்பதிவு வணிகம் அடங்கும், இது பணமில்லா, தொந்தரவு இல்லாத அடிப்படையில் இருக்கும். Zomato மற்றும் One 97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் (OCL) ஆகிய இரண்டு நிறுவனங்களின் நிர்வாகக் குழுக்களும் இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளன. இந்த ஒப்பந்தத்தின் கீழ், பொழுதுபோக்கு டிக்கெட் வணிகத்தின் அனைத்து துணை நிறுவனங்களும் இப்போது Zomato வின் கீழ் வரும். பேடிஎம் எக்ஸ்சேஞ்சிற்கு அளிக்கப்பட்ட தகவலில், இதில் பணிபுரியும் தற்போதைய 280 ஊழியர்களும் Zomato வில் இணைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தின் விதிமுறைகளின் கீழ், பொழுதுபோக்கு டிக்கெட் சேவைகள் 12 மாதங்களுக்கு பேடிஎம் செயலியில் கிடைக்கும். Zomato இந்த சேவைகளை அதன் தளத்திற்கு கொண்டு வரும்போது, பயனர் அங்கு திருப்பி விடப்படுவார் என்று Zomato தெரிவித்துள்ளது.
ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் 18,720 பெண் ஊழியர்களுக்கு ரூ.706 கோடியில் குடியிருப்பு வசதி!
Paytm-ன் பொழுதுபோக்கு டிக்கெட் பிரிவு திரைப்படங்கள், விளையாட்டு மற்றும் நிகழ்வுகளுக்கான முன்பதிவுகளை உள்ளடக்கியது. இந்த பிரிவு 297 கோடி ரூபாய் வருவாயையும், நிதியாண்டு 2024ல் 29 கோடி ரூபாய் வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. Paytm 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் இன்சைடர் மற்றும் டிக்கெட்நியூ வலைத்தளங்களை 268 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தியதன் மூலம் பொழுதுபோக்கு டிக்கெட் தளத்தில் நுழைந்தது. Zomato MD மற்றும் CEO தீபேந்தர் கோயல் கூறுகையில், பொழுதுபோக்கு டிக்கெட்டுகளுக்காக Zomato டிஸ்ட்ரிக்ட் என்ற பெயரில் ஒரு புதிய செயலி தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.
Blinkit's Record Raksha Bandhan Sales: Zomato பங்குகள் விலை உயர்வு!!