Tamil

Blinkit's Record Raksha Bandhan Sales: Zomato பங்குகள் விலை உயர்வு!!

Tamil

Zomato பங்குகளில் விலை உயர்வு

Zomato-வின் Blinkit, ஞாயிற்றுக்கிழமை புதிய சாதனை படைத்துள்ளது. இதன் காரணமாக Zomato பங்குகள் அதிக விலை உயர்ந்து காணப்படுகின்றன. 

Tamil

Zomato பங்கு விலை

திங்கட்கிழமை, ஆகஸ்ட் 19, 2024 அன்று, Zomato பங்குகள் 5% க்கும் அதிகமாக உயர்ந்து காணப்பட்டது. மதியம் 12 மணிக்கு பங்குகள் ரூ.270.03க்கு வர்த்தகமாகின.

Tamil

Blinkit புதிய சாதனை

ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 18 அன்று, Blinkit-ன் மொத்த வணிக மதிப்பு (GMV) உயர்ந்தது. Blinkit ஒவ்வொரு நிமிடமும் 693 ராக்கி ஆர்டர்களைப் பெற்று இருந்தது.

Tamil

Zomato பங்கு இலக்கு விலை

வெளிநாட்டு புரோக்கர் நிறுவனமான UBS, Zomato பங்குகளை வாங்க பரிந்துரைத்துள்ளது. இலக்கு விலையை ரூ.320 ஆக உயர்த்தியுள்ளது. புரோக்கர் நிறுவனமான CLSA ரூ.350 ஆக நிர்ணயித்துள்ளது. 

Tamil

Zomato பங்கின் வருமானம்

Zomato கடந்த ஓராண்டில் முதலீட்டாளர்களுக்கு 210% லாபத்தை அளித்துள்ளது. ஆகஸ்ட் 21, 2023 அன்று ரூ.89.72 ஆக இருந்த பங்கின் விலை ஆகஸ்ட் 19, 2024 அன்று ரூ.270 ஆக உயர்ந்துள்ளது.

Tamil

Zomato பங்கின் 2024 வருமானம்

ஜனவரி 1, 2024 அன்று Zomato பங்குகள் விலை ரூ.124.50 ஆக இருந்தது, இது ஆகஸ்ட் 2024 இல் ரூ.270 ஐ எட்டியுள்ளது. 6 மாதங்களில் இந்த பங்கு 75% க்கும் அதிகமான வருமானத்தை அளித்துள்ளது.

Tamil

Zomato பங்கின் உயர்வு-குறைவு

Zomato பங்கின் 52 வார உயர்வு ரூ.280 ஆக உள்ளது. 52 வாரங்களில் ரூ.88.16 என்ற அளவில் குறைவாகவும் இருந்தது.

Tamil

ஆலோசனை

பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது இடர்பாடுகளுக்கு உட்பட்டது. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் சந்தை நிபுணரின் ஆலோசனையைப் பெறுங்கள்.

உங்கள் நகரத்தின் தங்கம் விலை இன்று ஏறியதா? இறங்கியதா?

கிரெடிட் கார்டு இருந்தாலே தினமும் ரூ.500 கிடைக்குமா? அது எப்படி?

இந்தியாவில் பணக்கார மதகுருமார்கள் யார், யார்?

Top 10: இந்தியாவை விட அதிகமாக தங்கம் வைத்திருக்கும் நாடுகள்!!