இந்தியாவில் மதகுருக்களுக்கு பஞ்சமே இல்லை. அவர்களது சொத்து என்ன என்று பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள்.
மதகுருக்களின் சொத்து
மத அமைப்புகள், ஆசிரமங்கள், வணிக நிறுவனங்கள் மூலம் ஏகப்பட்ட சொத்துகளை சேர்த்து வச்சிருக்காங்க.
ஸ்வாமி நித்யானந்தா
நித்யானந்தா சுவாமியோட சொத்து மதிப்பு ரூ. 10,000 கோடி. இவர் நித்யானந்தா தியான பீடம் மூலமா நடத்தப்படும் ஆசிரமங்கள், கோயில்கள், குருகுலங்களில் இருந்து சம்பாதிக்கிறார்.
பாபா ராம்தேவ்
ராம்தேவ் பாபாவும் ரொம்ப பணக்காரர். இவரோட சொத்து மதிப்பு ரூ. 1,600 கோடி. இவர் பதஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட், அதோட துணை நிறுவனங்கள் மூலம் சம்பாதிக்கிறார்.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரும் ரூ. 1,000 கோடி சொத்து மதிப்பை வச்சிருக்கார். இவர் ஆர்ட் ஆஃப் லிவிங் பவுண்டேஷன், தியான மையங்கள் மூலம் நன்கொடைகள் சம்பாதிக்கிறார்.
அசாராம் பாபு
அசாராம் பாபு இந்தியா, வெளிநாடுகள்ல இருக்கக்கூடிய பள்ளிக்கூடங்கள், ஆசிரமங்கள், நிறுவனங்கள் மூலம் நிறைய சம்பாதிக்கிறார். இவரோட சொத்து மதிப்பு: சுமார் ரூ. 10,000 கோடி.
சத்குரு ஜக்கி வாசுதேவ்
சத்குரு ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளை மூலம் நடத்தப்படும் தியானம், யோகா மையங்கள், கல்வி நிறுவனங்கள், உலகம் முழுவதும் இருந்து வரக்கூடிய நன்கொடைகள் மூலம் வருமானம் வருகிறது.