Asianet News TamilAsianet News Tamil

yono sbi: ரூ.35 லட்சம் வரை எக்ஸ்பிரஸ் கடன்: yono app மூலம் எஸ்பிஐ வங்கி புதிய சலுகை: தகுதி என்ன

yono sbi : The SBI Real Time Xpress Credit (RTXC) personal loan feature is available for salaried individuals with a salary account with the lender. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, தனதுவாடிக்கையாலர்களுக்கு ரூ.35 லட்சம் வரை எக்ஸ்பிரஸ் கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

yono sbi :   SBI Offers up to Rs 35-Lakh Instant Loan via YONO App
Author
New Delhi, First Published May 27, 2022, 11:03 AM IST

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, தனதுவாடிக்கையாலர்களுக்கு ரூ.35 லட்சம் வரை எக்ஸ்பிரஸ் கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

எக்ஸ்பிரஸ் கடன்

ஆனால், இந்த கடனை வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ வங்கியின் yono (யோனோ) செயலி மூலம்தான் பெற முடியும். முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டு இந்த கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் கடன் பெறுவதற்காக வங்கிக்கு நேரடியாக வரத் தேவையில்லை என்பதற்காக எஸ்பிஐ ரியல் டைம் எக்ஸ்பிரஸ் கிரெடிட்(ஆர்டிஎஸ்சி) பெர்ஷனல் லோன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

yono sbi :   SBI Offers up to Rs 35-Lakh Instant Loan via YONO App

இந்த யோனோ செயிலி மூலம் கடன் பெறுவோர், எஸ்பிஐவங்கியில் சம்பளக் கணக்கை வைத்திருக்க வேண்டும் அல்லது மத்திய அரசு மாநில அரசு, பாதுகாப்புத்துறையில் பணியாற்றுபவராக இருக்க வேண்டும்.

டிஜிட்டல் முறை

எஸ்பிஐ வங்கி வெளியிட்ட அறிவிப்பில் “ வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் ரீதியில் அதிகாரம் வழங்கும் நோக்கில் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி, ரியல் டைம் எக்ஸ்பிரஸ் கிரெடிட் கடனுதவி திட்டத்தை யோனோ ஆப்ஸ் மூலம் வழங்குகிறது. ஊதியம் பெறும் வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம், டிஜிட்டல் அவதாரமெடுத்துள்ளது.

யோனோ செயலி மூலம் கடன் பெற விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு எந்த விதமான ஆவணங்களையும் நேரடியாக அளிக்க வேண்டியதில்லை. அனைத்தையும் டிஜிட்டலாக பதிவேற்றம் செய்யலாம். 8 விதமான செயல்பாடுகள் மூலம் எளிதாக தனிநபர் கடன் பெறலாம். கடனுதவி பெறத் தகுதியை தீர்மானித்தல், கிரெடிட் பரிசோதனே, ஆவணப்பரிசீலனை உள்ளிட்ட அனைத்தும் டிஜிட்டல் முறையில் நடத்தப்பட்டு கடன் விண்ணப்பதாரருக்கு தகவல் தெரிவிக்கப்படும். அனைத்து தகுதிகளும் இருக்கும் பட்சத்தில் உடனடியாக கடனுதவி வழங்கப்படும். 

yono sbi :   SBI Offers up to Rs 35-Lakh Instant Loan via YONO App

தகுதி

எஸ்பிஐ வங்கியில் ஊதியக் கணக்கு வைத்துள்ள மத்திய அரசில் பணியாற்றும் ஊழியர்கள், மாநில அரசுகளில் பணியாற்றும் ஊழியர்கள், பாதுகாப்பு துறையில் பணியாற்றுவோர் ஆகியோருக்கு இது பொருந்தும்

இது தவிர எஸ்பிஐ வங்கியில் மாத ஊதியக் கணக்கு வைத்திருப்போர்.

குறைந்தபட்சமாக மாதம் ரூ.15 ஆயிரம் ஊதியம் பெறுவோர்

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோர், மாநில அரசுகளின் நிறுவனங்களில் பணியாற்றுவோர், தேசிய அளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் பணியாற்றுவோர், சில தேர்வு செய்யப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றுவோர் ஆகியோர் கடன் பெற தகுதியானவர்கள்

yono sbi :   SBI Offers up to Rs 35-Lakh Instant Loan via YONO App

வி்த்தியாசமான அனுபவம்

எஸ்பிஐ வங்கியின் தலைவர் தினேஷ் காரா கூறுகையில் “ தகுதி வாய்ந்த மாதம் ஊதியம் பெறுவோருக்காக ரியல் டைம் எஸ்க்பிரஸ் கிரெடிட் திட்டத்தை யோனோ ஆப்ஸ் மூலம் அறிமுகம் செய்துள்ளோம். எக்ஸ்பிரஸ் கிரெடிட் திட்டம் மூலம் வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் முறையில், எந்த விதமான ஆவணங்களை நேரில் அளிக்க அலையாதவகையில், தாமதமின்றி கடன் பெறலாம். வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து டிஜிட்டல் ரீதியான அனுபவங்களை அளித்து, வங்கிச் சேவையை எஸ்பிஐ வங்கி எளிதாக்குகிறது. இந்த எக்ஸ்பிரஸ் லோன் திட்டம் மூலம் உடனுக்குடன் ரூ.35 லட்சம் வரை வாடிக்கையாளர்கள் கடன் பெறலாம்” எனத் தெரிவித்தார்
 

Follow Us:
Download App:
  • android
  • ios