“இன்னும் ஏன் மழை வரல ”..........காரணத்தை  சொல்லிடாரு இவரு ..!!!

தற்போது  தமிழ் நாட்டில் , வடகிழக்கு பருவமழை தொடங்க  வேண்டிய   சரியான  நேரம்  இதுதான்....!!!ஆனால் இதுவரை  தொடங்கவில்லை........ ஏன் ? என்னாச்சினு கேட்டா ...?

சென்னை  வானிலை  ஆய்வு மைய இயக்குனர்  ஒரு  விளக்கத்தை சொல்லி இருக்கார்.

அதாவது,  பருவமழை தாமதமாவதற்கு காரணம், வடகிழக்கிலிருந்து காற்று வீசாமல், வடமேற்காக காற்று வீசுவதே  காரணமாம் .இன்னும் சொல்ல போனால், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மியான்மர் நோக்கி  சென்று கொண்டிருக்கிறதாம்.......

அதாவது, வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்து, விலகிக் கொள்ளும்போதுதான் தென்மேற்கு பருவமழை நிறைவு பெற்று, வடகிழக்கு பருவமழை தொடங்கும்னு  சொல்லி  இருக்கார் பாலச்சந்தர்.அதனால  தற்போதைக்கு   வடகிழக்கு  பருவமழைக்கு  வாய்ப்பு  இல்லை என  சொல்லி இருக்கார்.

இந்நிலையில், வரும் 28 ஆம் தேதி  முதல் வடகிழக்கு மழை தொடர வாய்ப்பு உள்ளது  என  மேலோட்டமா  சொல்லி  இருக்கார்  பாலச்சந்தர்......

அதுமட்டுமில்லாம,  கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மழை  பொலிவு  சற்று குறைவாகத்தான்  இருக்கும்  எனவும் தெரிவித்துள்ளார் .