whole saleprice index :நாட்டின் மொத்தவிலைப் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 14.55 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.
நாட்டின் மொத்தவிலைப் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 14.55 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.
சமையல் எண்ணெய் விலை உயர்வு, மின்சாரக் கட்டணம் உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்றவற்றால் மொத்தவிலைப் பணவீக்கம் இந்த அளவு அதிகமாக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து 12-வது மாதாக மொத்தவிலைப் பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் அதிகரித்துள்ளது. கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவாக 14.55 சதவீதமாக மொத்தவிலைப் பணவீக்கம் அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 13.11 சதவீதமாக பணவீக்கம் உயர்ந்திருந்தது.
கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் மொத்தவிலைப் பணவீகக்ம் 7.89 சதவீதமாக இருந்தது. அதன்பின் தொடர்ந்து 12 மாதங்களாக இரட்டை இலக்கத்திலேயே பணவீக்கம் உயர்ந்து வந்துள்ளது. மார்ச் மாதத்தில் சில்லரை பணவீக்கம் 6.95 சதவீதமாக அதிகரித்தது.
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவு என்பது 6 சதவீதத்துக்குள்ளே வைத்திருப்பதுதான், ஆனால், அதைவிட அதிகரித்து ஏறக்குறைய7 சதவீதத்தைத் தொட்டுள்ளது. தொடர்ந்து 3-வது மாதமாக சில்லரைப் பணவீக்கம் 6 சதவீதத்துக்கு அதிகமாகச் சென்றுள்ளது.

மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் “ 2022 மார்ச் மாதம் மொத்தவிலைப் பணவீக்கம் அதிகரித்தமைக்கு முதன்மையான காரணம் கச்சா எண்ணெய் விலை உயர்வு, இயற்கை எரிவாயு விலை உயர்வுதான். இது தவிர தாது எண்ணெய், உலோகம் ஆகியவற்றின் சப்ளை பாதிப்பு, ரஷ்யா உக்ரைன் போரால் பொருட்களின் சப்ளை பாதிப்பும் விலைவாசி உயர்வுக்குக் காரணம்.
மின்சாரம்ம மற்றும் எரிபொருள்களுக்கான பணவீக்கம் மார்ச் மாதத்தில் 5.68 சதவீதமாகவும், உற்பத்திப் பொருட்களுக்கான பணவீக்கம் 10.71 சதவீதமாக இருக்கிறது . உணவுப் பொருள் பணவீக்கம் மார்ச் மாதத்தில் 8.71 சதவீதமாக அதிகரித்துள்ளது. முட்டை, இறைச்சி, மீன் ஆகியவற்றுக்கான பணவீக்கம் 9.42 சதவீதமாகவும், உருளைக்கிழங்கு 24.62 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
