புதிதாக தொழில் தொடங்குவோர் டின் நம்பர் பெறுவது கட்டாயம். இந்த வழிகாட்டி டின் நம்பர் பெறுவதற்கான வழிமுறைகள், தேவையான ஆவணங்கள் மற்றும் அதன் பயன்பாடுகளை விளக்குகிறது.

TIN நம்பர் என்பது

புதிதாக தொழில் தொடங்குவோர் தங்களது தொழில் குறித்த விவரங்களை மாநில அரசிடம் பதிவு செய்வது கட்டாயமாகும். அதன் பிறகு தமிழக அரசால் வழங்கப்படும நம்பர் தான் வரி செலுத்துபவர் அடையாள எண் (Taxpayer Identification Number). பொருட்கள் தயாரிப்பு, சேவை, வியாபாரம் உள்ளிட்ட எதுவாக இருந்தாலும் டின் நம்பரை கண்டிப்பாக பெறவேண்டும்.அரசுக்கு வணிக வரியை முறையாகவும் சரியாகவும் செலுத்திவிட்டு இந்த தொழிலை செய்கிறோம் என்பதற்கான அடையாளமே இது.உற்பத்தியாளர்கள், முகவர்கள், வர்த்தகர்கள், ஏற்றுமதி செய்பவர்கள் என வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைவரும் இந்த அனுமதி வாங்க வேண்டும் என்கின்றனர் பொருளாதார ஆலோசகர்கள்.

டின் நம்பர் பெற தேவைப்படும் ஆவணங்கள்

டின் நம்பர் பெறுவதற்கான விண்ணப்பதாரரின் புகைப்படம், குடும்ப அட்டை நகல், PAN கார்டு நகல், சொத்து தொடர்பான ஆவணங்கள் நகல், வாடகை ஒப்பந்த பத்திரம் நகல் ஆகியவை விண்ணப்பத்தோடு இணைக்க வேண்டும்.மேலும் வணிகவரி துறையின் Form F Form A விண்ணப்பங்களை வாங்கி பூர்த்தி செய்யவேண்டும். நாம் தொடங்கவுள்ள தொழிலுக்கு ஏற்ப கட்டணங்கள் வெவ்வேறாக இருக்கும். இந்த கட்டணத்திற்கு மட்டும் வணிகவரித்துறை பெயரில் வங்கி வரைவோலை கொடுக்க வேண்டும். ஏற்கனவே டின் நம்பர் வைத்திருக்கும் இரண்டு நபர்களின் பரிந்துரைக் கடிதத்தை நமது விண்ணப்பத்தோடு இணைக்க வேண்டும் என்பது கட்டாயம்.

வீடு தேடி வரும் டின் நம்பர்

நாம் சமர்ப்பிக்கும் ஆவணங்கள் சரிபார்ப்புக்கு பிறகு டின் நம்பர் நமக்கு வழங்கப்படும். விண்ணப்பத்தில் நாம் சமர்ப்பித்துள்ள முகவரிக்கு 7 வேலை நாட்களில் டின் நம்பர் வந்து சேரும். ஒரு பான் எண்ணுக்கு ஒரு டின் நம்பர் மட்டுமே வழங்கப்படும் என்பதால் ஒருவர் பல டின் நம்பர்களை பெறமுடியாது. இந்த எண்ணை அடிப்படையாக வைத்து ஒருவர் பல தொழில்களையும் செய்யலாம். ஆனால், டின் எண் வாங்கியவரின் பெயரில்தான் இந்த தொழில்கள் தொடங்க வேண்டும் என்பது கட்டாயம். ஒருவரது பெயரில் வாங்கப்பட்ட டின் நம்பரை வைத்து கூட்டாகத் தொழில் செய்ய பயன்படுத்த முடியாது என்றும் ஒரே டின் எண்ணின் அடிப்படையில் புதிய தொழில் தொடங்கும்போது வணிக வரித் துறைக்கு கடிதம் மூலமாகத் தெரிவிக்க வேண்டியது கட்டாயம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டின் எண் வாங்குவது ஒன்றும் கம்பசூத்திரம் அல்ல, இதற்கென உள்ள முகவர்கள் மூலமாக எளிதாக பெறலாம். இல்லையேல் தொழில் ஆலோசகர்கள், எம்எஸ்எம்இ அலுவலகங்கள், டான்ஸ்டியா அலுவலகங்கள் மூல மாகவும் டின் நம்பர் எடுத்துக் கொள்ளலாம்.

TIN விண்ணப்ப நிலையை எப்படி சரிபார்ப்பது?

TIN (Tax Identification Number) விண்ணப்பத்தின் நிலையை நீங்கள் கீழ்காணும் வழிகளில் சரிபார்க்கலாம்:

NSDL இணையதளம் வழியாக, NSDL TIN இணையதளம் சென்று ‘Status Track’ பகுதியை தேர்ந்தெடுக்கவும்.

விண்ணப்ப வகையை (பன்கார்டு, TIN, போன்றவை) தேர்வு செய்யவும்.

உங்கள் 15 இலக்க அனுமதி எண் (Acknowledgement Number) உள்ளீடு செய்யவும்.

இந்த எண்ணை, விண்ணப்பித்த 3 நாட்களுக்கு பிறகு பெறலாம்.

கால் சென்டர் மூலம்

NSDL TIN கால் சென்டருக்கு 020-27218080 என்ற எண்ணில் அழைக்கவும்.

SMS மூலம்

உங்கள் மொபைலில் ‘NSDLPAN <15 digit acknowledgement number>’ என டைப் செய்து 57575 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்.

TIN (வரி அடையாள எண்) பயன்பாடுகள் என்ன?

TIN பல முக்கியமான வரி தொடர்பான பயன்பாடுகளுக்கு உதவுகிறது:

அனைத்து முக்கிய வரி விவரங்களையும் ஒரே இடத்தில் பெற முடியும்.

TIN பெற்ற பிறகு input tax credit பெற முடியும்.

வருமான வரி சட்டத்தின் கீழ் சொத்துக்களை அடையாளம் காண உதவுகிறது.

வணிகங்கள் தங்களது வர்த்தக நடவடிக்கைகளை தொடர TIN அவசியம்.

மாநிலங்களுக்குள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பரிவர்த்தனைகளை பதிவு செய்ய உதவுகிறது.