தங்கம் விலை கடந்த வாரம் முழுவதும் உயர்ந்த நிலையில் இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது.   

தங்கம் விலை கடந்த வாரம் முழுவதும் உயர்ந்த நிலையில் இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது.

சென்னையில் இன்று காலை நிலவரப்படி, தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 20ரூபாயும், சவரணுக்கு 160 ரூபாயும் குறைந்துள்ளது.

ஐடி ரிட்டன் தாக்கலுக்கு 31ம்தேதி கடைசி: தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,815க்கும், சவரன் ரூ.38,520க்கும் விற்பனை ஆனது. இன்று காலை தங்கம் விலை குறைந்துள்ளது. இதன்படி, சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் சரிந்து ரூ4,795ஆகவும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.38,360க்கும் விற்கப்படுகிறது.

கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4795ஆக விற்கப்படுகிறது. 

இலங்கை அரசுக்கு எந்தவிதமான புதிய நிதி உதவி கிடையாது: உலக வங்கி கைவிரிப்பு

தங்கதத்தின் விலை கடந்த வாரம் முழுவதும் உயர்ந்தது. ஆனால், இந்த வாரத் தொடக்கத்தில் தங்கத்தின் விலையில் அதிரடியான மாற்றம் வந்து குறைந்துள்ளது. கடந்த மாதம் 28ம் தேதியிலிருந்து மீண்டும் தங்கம் விலை சவரன் ரூ.38ஆயிரத்தைக் கடந்து உயர்ந்து வந்தது. ஆனால், திடீரென இன்று சவரனுக்கு 160 குறைந்திருக்கிறது.

தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் 5 முக்கியக் காரணங்கள் கூறப்படுகிறது. முதலில் இங்கிலாந்து வங்கியின் வட்டி அதிகரிப்பு குறித்து இந்த வாரம் அறிவிப்பு ஏதேனும் வெளியாகவும் என்ற கருத்து நிலவுகிறது. 

2வதாக, கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் கூட்டமைப்பு, உற்பத்தியை அதிகப்படுத்துவது குறித்து இன்று கூடி ஆலோசனை நடத்துகின்றன. இதனால் கச்சா எண்ணெய் விலையே இன்று பேரலுக்கு66 சென்ட்கள்குறைந்துவிட்டன. ஒருவேளை கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகப்படுத்த முடிவு செய்தால், விலை குறையத் தொடங்கும். கச்சா எண்ணெயில்முதலீடு தங்கத்தின்பக்கம் திரும்பும்.

ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்துக்குள் ஊதியமிருந்தாலும் ITR தாக்கல் செய்யணுமா? நன்மைகள் என்ன?

அடுத்ததாக அமெரிக்க பெடரல் வங்கி வட்டி வீதத்தை உயர்த்துவோம், ஆனால், தீவிரமாக அமல்படுத்தும்நோக்கம் இல்லை எனத் தெரிவித்துள்ளது இதுவும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தியாவின் உற்பத்தித்துறையின் புள்ளிவிவரங்கள் இந்த வாரத்தில் வெளியிடப்படுகின்றன. இதுவும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். 

வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 40 பைசா குறைந்து, ரூ.63.30 ஆகவும், கிலோவுக்கு ரூ.400 குறைந்து, ரூ.63,300க்கும் விற்கப்படுகிறது.