we cant get more than 20 k for jewel loan from bank
டிஜிட்டல் இந்தியாவை உருவாக்குவதில்,மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்று தான் , தற்போது ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்.
வங்கிகளில் நகைக் கடன் வாங்குவதே, அவசர தேவைக்காகத்தான். ஆனால் அவ்வாறு நகைக்கடன் பெறும்போது 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே ரொக்கமாக தருவார்கள். அதற்கு மேலான பணத்திற்கு காசோலை மூலமாகத்தான் வழங்க வேண்டுமென ரிசர்வ் வங்கி அதிரடியாக அறிவித்து உள்ளது .
இதன் காரணமாக சிறு குறு தொழில் செய்யும் நடுத்தர மக்கள் உள்ளிட்ட அவசர தேவைக்காக நகைக்கடன் வாங்கும் பாமர மக்கள் மட்டுமே அதிகம் பாதிக்கப் படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக ஒரு லட்சம் ரூபாய் வரை ரொக்கமாக தங்க நகை மீது கடன் வழங்கப் பட்டு வந்தது . ஆனால் இனி அவ்வாறு பெற முடியாது .
இதன் காரணமாக, வங்கி அல்லாத மற்ற பிற நிதி நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
