பழைய ரூபாய் நோட்டுகள் :
பழைய நோட்டு செல்லாது, என்ற அறிவிப்பு வெளியான பிறகு, வங்கியில் டெபாசிட் செய்த பணம் எவ்வளவு எனவும்,வரம்புக்கு மீறி டெபாசிட் செய்திருந்தால், அது குறித்த ஆய்வு தற்போது வருமானவரைத்துரையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
18 லட்சம் கணக்கு:
18 லட்சம் கணக்குகளில், இதுவரை கருப்பு பணம் டெபாசிட் வருமானவரித்துறையினர் சந்தேகிக்கின்றனர் . இதற்கிடையில், பழைய நோட்டு டெபாசிட் செய்தவர்கள்( கருப்பு பணமாக இருக்கலாம் ) தங்கள் வங்கிக் கணக்கு வருமான வரித்துறையால், சோதனை செய்யப்பட்டு வருகிறதா என்பதை தெரிந்துகொள்ள, தாமாகவே ஆன்லைனில் பார்த்துக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
எப்படி ஆன்லைனில் பார்ப்பது :
இதுகுறித்து வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறுகையில், https://incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில், 2016 பண பரிவர்த்தனை என்ற பகுதியில் விவரங்களை சரிபார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை எவ்வாறு சரிபார்ப்பது குறித்த அனைத்து விவரங்களும் , அந்த இணையதளத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
6௦ மாற்றங்கள் :
ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்த பின்பு, 43 நாட்களிலேயே 60க்கும் மேற்பட்ட மாற்றங்களை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் மேற்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.
