சேமிப்பு வட்டி விகிதம் உயர்வு?; பி.எஃப் பணத்தை ஏடிஎம்மில் எடுக்கும் வசதி; ஜனவரியில் என்னென்ன மாற்றங்கள்?
ஜனவரி மாதம் முதல் அரசு சேவை மற்றும் அரசு திட்டங்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர வாய்ப்புள்ளது.
நமக்கு பல்வேறு இன்பங்களையும், துன்பங்களையும் அள்ளிக்கொடுத்த 2024ம் ஆண்டு விடைபெற்று இன்று இரவு 12 மணி முதல் 2025ம் ஆண்டு பிறக்க உள்ளது. இந்த புதிய ஆண்டின் தொடக்கத்தில் பல்வேறு அரசு சேவைகளில் மாற்றம் செய்யப்படுகின்றன. இது விரிவாக பார்ப்போம்.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) திட்டத்தில் UAN ஆக்டிவேஷன் செய்யவும், வங்கிக் கணக்குகளை ஆதாருடன் இணைக்கவும் ஜனவரி 15ம் தேதி வரை தான் அவகாசம் உள்ளது. UAN ஆக்டிவேட் செய்தால் மட்டுமே EPFOசேவைகளை பயன்படுத்த முடியும். ஏற்கெனவே காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இனிமேல் அரசு அவகாசம் தர வாய்ப்பில்லை. ஆகவே ஜனவரி 15ம் தேதிக்குள் இதை செய்து முடித்து விடுங்கள்.
புத்தாண்டின் தொடக்கத்தில் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்விதமாக ஜனவரி மாதம் அகவிலைப்படி உயர்வு இருக்கலாம் என கூறப்படுகிறது. அதாவது அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் டிஏ இரண்டும் ஒன்றாக இணைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கடந்த சில மாதங்களாக அகவிலைப்படி 50% அளவை மீறிய நிலையிலும், அடிப்படை ஊதியத்துடன் DA இணைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் சேமிப்பு திட்டங்களான மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS), சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY)மாதாந்திர வருமானத் திட்டங்கள், பொது வருங்கால வைப்பு நிதி, செல்வமகள் சேமிப்பு திட்டம் உள்ளிட்டவற்றில் வட்டி விகிதம் ஜனவரி மாதத்தில் இருந்து மாற்றி அமைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதேபோல் EPFOவில் உள்ள நமது பி.எஃப் பணத்தை ஏடிஎம் மூலம் எளிதாக எடுக்கும் வசதியும் நடைமுறைக்கு வர உள்ளன.
பி.எஃப் பணத்தை கிளைம் செய்ய இனி நாள் கணக்கில் காத்திருக்க தேவையில்லை. நாம் கிளைம் செய்த உடனேயே நமது அக்கவுண்டுக்கு பணம் வந்துவிடும். அதை ஏடிஎம் மூலமாகவே எடுத்துக் கொள்ள முடியும். இதற்ககாக EPFOவில் சந்தாரர்களுக்கு ஏடிஎம் கார்டுகள் வழங்கப்படும்.
புதிய ஆண்டு தொடங்குவதற்குள் ஆதார் - பான் கார்டை இணைக்க வேண்டும் என அர்சு உத்தரவிட்டுள்ளது. ஆதார் - பான் கார்டை இணைப்புக்கான கெடு இன்றுடன் (டிசம்பர் 31) முடிவடையும் நிலையில், அதிகபட்சம் ஜனவரி மாதத்துக்குள்ளாவது ஆதார் பான் கார்டை இணைத்து விடுங்கள். ஜன்வரி 1ம் தேதி முதல் இதற்கு அபாரதம் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
ஜனவரி மாதம் முதல் சிகரெட்டுகள், புகையிலை பொருட்களான வரியை 28%ல் இருந்து 35# ஆக உயர்த்த வாய்ப்புள்ளது என்றும் காற்று நிரப்பப்பட்ட பானங்களின் வரியையும் மத்திய அரசு உயர்த்த இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ரூ.1,500 வரையிலான ஆயத்த ஆடைகளுக்கு 5% வரியும், அதற்கு மேல் விலை கொண்ட ஆடைகளுக்கு 18% முதல் 28% வரை வரி விதிக்கபட வாய்ப்பு இருப்பதகவும் தகவல்கள் கூறுகின்றன.