Asianet News TamilAsianet News Tamil

us fed meeting: அமெரி்க்க பெடரல் வங்கி வட்டியில் 75 புள்ளிகள் இன்று உயரலாம்? இந்தியாவுக்கு பாதிப்பு வருமா?

அமெரிக்க  பெடரல் வங்கி இன்று கூட்டும் நிதிக்கொள்கைக் கூட்டத்தில் கடனுக்கான வட்டியை 75 புள்ளிகள்வரை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தி பைனான்சியல் எக்ஸ்பிரஸ் நாளேடு தெரிவித்துள்ளது.

US Fed meets: a 75 basis point interest rate increase is probable due to inflation
Author
New York, First Published Jul 27, 2022, 5:37 PM IST

அமெரிக்க  பெடரல் வங்கி இன்று கூட்டும் நிதிக்கொள்கைக் கூட்டத்தில் கடனுக்கான வட்டியை 75 புள்ளிகள்வரை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தி பைனான்சியல் எக்ஸ்பிரஸ் நாளேடு தெரிவித்துள்ளது.

சில பொருளாதார ஆய்வு நிறுவனங்கள் பெடரல் வங்கி வட்டியை 100 முதல் 75 புள்ளிகள் வரை உயர்த்தலாம் எனவும் தெரிவித்துள்ளது.

இலங்கை முன்னாள்அதிபர் கோத்தபய ராஜபக்ச விசாவை நீட்டித்தது சிங்கப்பூர்

அமெரிக்காவில் வரலாறு காணாத வகையில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் 9 சதவீதத்துக்கும் அதிகமாக பணவீக்கம் உயர்ந்தது. இதையடுத்து, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பெடரல் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தும்  என்ற கருத்து நிலவியது. ஏற்கெனவே இருமுறை பெடரல் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தியது.

இந்நிலையில் 3-வது முறையாக இன்று வட்டி வீதத்தை உயர்த்தி பெடரல் வங்கி அறிவிப்பு வெளியிடலாம் எனத் தெரிகிறது. இதன் மூலம் அமெரிக்காவில் கடனுக்கான வட்டி 3.5 சதவீதம் அல்லது 3.75 அளவுக்க உயரக்கூடும். 

ஐரோப்பிய நாடுகளின் பங்குச்சந்தை, ஆசியப் பங்குச்சந்தை, தங்கம்விலை ஆகியவை பெடரல் வங்கியின் அறிவிப்பை எதிர்பார்த்துள்ளன. 

யோகம் இப்படி வரணும்! கடனால் வீட்டை விற்க முயன்றவருக்கு லாட்டரியில் ரூ.ஒரு கோடி பரிசு

அமெரிக்காவில் இந்த பணவீக்கம் என்பது சப்ளை பகுதியிலிருந்து வந்த பணவீக்கமாகும். அதாவது, ரஷ்யா உக்ரைன் இடையே ஏற்பட்ட போரால், கமாட்டி பொருட்கள் கிடைப்பதில் சிக்கல், விலை உயர்வு, குறிப்பாக கச்சா எண்ணெய் கிடைப்பதில் சிக்கலால் பணவீக்கம் அதிகரித்துள்ளது. மேலும் சீனாவில் கொரோனா பரவல் குறையாமல் இருப்பதால், மைக்ரோசிப் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் அமெரிக்காவில் பணவீக்கம் உயர்ந்துள்ளது. 

 வடஅமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கடந்த 20 முதல் 70 ஆண்டுகளில் சந்திக்காத பணவீக்கத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். இந்த நாடுகளில் பங்குச்சந்தையில் ஏற்கெனவே நிலையற்ற சூழல் இருப்பதால், பெடரல் வங்கி வட்டியை உயர்த்துவது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்தியாவைப் பொறுத்துவரை பெடரல் வங்கி வட்டியை உயர்த்தினால் அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டை எடுத்து டாலரில் முதலீடு செய்ய முயல்வார்கள். இதனால் பங்குச்சந்தையிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேற்றம் அதிகரிக்கும். 

மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில்வே டிக்கெட்டில் சலுகை: ஆனால்…!

அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெறும்போது, டாலரின் தேவை அதிகரிக்கும். அப்போது டாலரின் மதிப்பு வலுவடையும்போது, ரூபாய் மதிப்பு நெருக்கடிக்குள்ளாகும். ஏற்கெனவே ரூ.80க்கு கீழ்வரை சென்று தற்போது ரூ.79ல் இருக்கும் ரூபாய் மதிப்பு ரூ.80க்கும் கீழே செல்லக்கூடும்.

தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் நிலையற்ற விலையாக இருக்கும் என்பதால் தங்களின் கவனத்தை டாலரில் திருப்புவார்கள். இதனால் தங்கத்தின் மீது முதலீடு செய்வது குறையும். வரும் நாட்களில் தங்கத்தின் விலையிலும் மாற்றம் இருக்கும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios