upi transaction: வரலாற்றில் முதல்முறை: ரூ.10 லட்சம் கோடியை கடந்து UPI பரிமாற்றம் சாதனை

upi transaction :இந்தியாவில் யுபிஐ பேமெண்ட் அறிமுகப்படுத்தப்பட்டபின் முதல்முறையாக ஒரு மாதத்தில் ரூ.10 லட்சம் கோடி பரிமாற்றங்களைச் செய்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. 

upi transaction : Another record month for UPI, transactions cross Rs 10 lakh crore milestone in May

இந்தியாவில் யுபிஐ பேமெண்ட் அறிமுகப்படுத்தப்பட்டபின் முதல்முறையாக ஒரு மாதத்தில் ரூ.10 லட்சம் கோடி பரிமாற்றங்களைச் செய்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. 

தேசிய மேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் “ கடந்த மே மாதத்தில் யுபிஐ பரிமாற்றம் புதிய வரலாறு படைத்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.10 லட்சம் கோடிக்கு பரிமாற்றங்கள் நாடுமுழுவதும் நடந்துள்ளன. கடந்த ஏப்ரலில் 558 பரிமாற்றங்கள் நடந்த நிலையில் மே மாதத்தில் 595 கோடி பரிமாற்றங்கள் நடந்துள்ளன.” எனத் தெரிவித்துள்ளது. 

upi transaction : Another record month for UPI, transactions cross Rs 10 lakh crore milestone in May

2016ம் ஆண்டு யுபிஐ பரிமாற்றம் அறிமுகப்படுத்தப்பட்டது. மக்கள் யுபிஐ பரிமாற்றத்துக்குள் வருவதற்கு மிகவும் சிரமப்பட்டும், தயக்கம்காட்டி வந்தநிலையில் கொரோனா விரைவாக உள்ளே கொண்டு வந்தது. கொரோனா காலத்தில் அதாவது 2020 மார்ச் மாதத்தில் மட்டும் 124 கோடி பரிமாற்றங்கள் நடந்து ரூ.2.06 லட்சம் கோடியை எட்டியது.

2021 மே மாதத்தில் யுபிஐ பரிமாற்றங்களோடு ஒப்பிடுகையில் 2022ம் ஆண்டு மே மாதத்தில் யுபிஐ பரிமாற்றம் 117 சதவீதம் அதிகரித்துள்ளது,மதிப்பின் அடிப்படையில் ரூ5 லட்சம் கோடியாக இருந்தநிலையில் 2022, மே மாதத்தில் ரூ.10லட்சம் கோடியைக் கடந்து சாதனைப்படைத்துள்ளது.2021-22ம் நிதியாண்டில் யுபிஐ பரிமாற்றங்கள் ஒரு லட்சம் கோடி டாலரைக் கடந்து புதிய வரலாறு படைத்துள்ளது. 

upi transaction : Another record month for UPI, transactions cross Rs 10 lakh crore milestone in May

தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில், யுபிஐ, ரூபே, பாரத்பே போன்ற ஏராளமான பேமெண்ட்ஆப்ஸ்கள் செயல்படுகின்றன. அடுத்த 3ஆண்டுகளுக்குள் யுபிஐ  பரிமாற்றங்கள் தினசரி 100 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யுபிஐ பரிமாற்றத்தில் 3 நிறுவனங்கள்தான் கோலோச்சுகின்றன. போன்பே, பேடிஎம், கூகுள்பே ஆகியவைதான். இதில் போன்பே மட்டும் 47சதவீத பங்கையும், கூகுள்பே 35 சதவீதம், பேடிஎம் 15 சதவீதத்தையும் கொண்டுள்ளது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios