இனி UPI PIN இல்லாமலே பணப்பரிவர்த்தனை செய்யலாம்.. Google Pay அறிமுகம் செய்துள்ள புதிய அம்சம்..

UPI PIN ஐ பயன்படுத்தாமல் பயனர்கள் வேகமாகவும் ஒரே கிளிக்கில் UPI பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் புதிய வசதியை கூகுள் பே நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.,

UPI LITE : Now you can make money transfer without UPI PIN.. New feature introduced by Google Pay..

இந்த நவீன டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை முறை அதிகரித்து வருகிறது. சிறு பெட்டிக் கடை முதல் பெரிய ஷாப்பிங் மால்கள் வரை பலரும் UPI முறையை பயன்படுத்தி வருகிறோம். மேலும் வேறொரு நபரின் வங்கிக்கணக்கிற்கு பணம் அனுப்பவும் UPI முறையே பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் கையில் பணம் இல்லை என்றாலும், எளிதாகவும், விரைவாகவும் பணத்தை பரிமாற்ற முடிகிறது. எனினும் இந்த முறையில் பணம் அனுப்ப UPI PIN  அவசியம். ஆனால் இனி UPI PIN இல்லாமலே பணப் பரிமாற்றம் செய்யலாம். ஆம். Google Pay நிறுவனம் UPI LITE புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. 

இதன் மூலம் UPI PIN ஐ பயன்படுத்தாமல் பயனர்கள் வேகமாகவும் ஒரே கிளிக்கில் UPI பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். UPI LITE கணக்கில் ஒரு நாளைக்கு இரண்டு முறை ரூ. 2,000 வரை ஏற்றலாம். மேலும் பயனர்கள் ரூ. 200 வரை உடனடி UPI பரிவர்த்தனைகளைச் செய்ய முடியும்..

கூகுளின் VP தயாரிப்பு மேலாண்மை அம்பரீஷ் கெங்கே இதுகுறித்து பேசிய போது "தனித்துவமான சலுகைகள் மற்றும் பயன்பாட்டு நிகழ்வுகள் நாட்டில் டிஜிட்டல் பேமெண்ட்டுகளை மேலும் ஏற்றுக்கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. UPI LITE-ஐ அறிமுகம் மூலம், பயனர்கள் வசதியான, சிறிய மற்றும் அதிவிரைவு கட்டண அனுபவத்தை அணுக உதவும். இதன் மூலம் சிறிய மதிப்புள்ள பரிவர்த்தனைகளை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.” என்று தெரிவித்தார். 

UPI LITE-ஐ எப்படி ஆக்டிவேட் செய்ய வேண்டும்?

Google Pay பயனர்கள் தங்கள் சுயவிவரப் பக்கத்திற்குச் சென்று Activate UPI LITE என்பதை கிளிக் செய்ய வேண்டும். இணைக்கும் செயல்முறை முடிந்ததும், பயனர்கள் தங்கள் UPI LITE கணக்கில் ரூ. 2,000 வரை பணத்தைச் சேர்க்க முடியும், ஒரு நாளுக்கான அதிகபட்ச வரம்பு ரூ.4,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பரிவர்த்தனையை முடிக்க, பயனர்கள் “Pay PIN-Free" என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

முன்னதாக UPI பரிவர்த்தனை செயல்முறையை எளிதாக்குவதற்காக செப்டம்பர் 2022-ல் இந்திய ரிசர்வ் வங்கியால் UPI LITE அம்சம் தொடங்கப்பட்டது, இது இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தால் (NPCI) செயல்படுத்தப்பட்டது. 15 வங்கிகள் UPI LITEஐ இன்றுவரை ஆதரிக்கின்றன, மேலும் பல வங்கிகள் வரவிருக்கும் மாதங்களில் இந்த முறையை பின்பற்றக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் டெஸ்லா கார் தொழிற்சாலை! ரூ.20 லட்சம் முதல் மின்சார கார் விற்க திட்டம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios