Asianet News TamilAsianet News Tamil

வருவாய் ஈட்டுவதில் சிக்கல்.. 12,000 பணியாளர்களை நீக்கும் முடிவில் பிரபல நிறுவனம் - என்ன நடந்தது? முழு விவரம்!

United Parcel Service : சுமார் 116 வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் துவங்கப்பட்ட பார்சல் சேவை நிறுவனம் தான் UPS எனப்படும் யுனைடெட் பார்சல் சர்வீஸ் நிறுவனம். இந்தியாவிலும் இதன் சேவைகள் உள்ளது.

United Parcel Service planning for lay off 12000 jobs revenue under pressure ans
Author
First Published Jan 30, 2024, 9:58 PM IST

இந்நிலையில் யுனைடெட் பார்சல் சேவை நிறுவனம், அதன் 2024 நிதியாண்டிற்கான மதிப்பிடப்பட்ட முடிவுகளைக் கணித்த பின்னர், சுமார் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் முடிவை எடுத்துள்ளதாக அந்த நிறுவனம் இன்று செவ்வாயன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. யுபிஎஸ் அதன் டிரக்லோட் சரக்கு தரகு வணிகமான கொயோட்டிற்கான மூலோபாய விருப்பங்களையும் ஆராயும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் எங்கள் நிறுவனத்தை எங்கள் மூலோபாயத்திற்கு பொருத்தி, மிகவும் முக்கியமானவற்றிற்கு எதிராக எங்கள் வளங்களை சீரமைக்கப் போகிறோம் என்றும் அந்நிறுவன CEO கரோல் டோம், காலாண்டு வருவாய் கூட்டம் ஒன்றில் பங்கு பகுப்பாய்வு அறிஞர்கள் மத்தியில் இதை கூறினார். உலக அளவில் பல நாடுகளில் UPS நிறுவனம் கிளைகளை பரப்பியுள்ளது.

பட்ஜெட் 2024: மிடில் கிளாஸ் மக்களின் எதிர்பார்ப்பு என்ன? நிறைவேற்றுவாரா நிர்மலா சீதாராமன்?

ஜார்ஜியா நாட்டில் உள்ள அட்லாண்டாவை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், கென்டுகி நாட்டில் உள்ள Louisville என்ற இடத்தில் நான் உலகத்திலேயே பெரிய அளவிலான பணியாளர்களை கொண்டுள்ளது. தற்பொழுது இந்த நிறுவனம் உலக அளவில் சுமார் 12,000 தொழிலாளர்களை நீக்க முடிவு செய்துள்ளது. 

காலாண்டு வருவாய் மதிப்பீட்டு கூட்டத்தின் பொழுது இந்த லே ஆஃப் குறித்து பேசிய அந்நிறுவனத்தின் தலைவர் இது மிகவும் கடினமான மற்றும் ஏமாற்றம் தரும் முடிவு என்று கூறினார். 2023 ஆம் ஆண்டு இறுதி காலாண்டில் அதாவது டிசம்பரில் இந்த நிறுவனத்தின் மொத்த வருமான சுமார் 32 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

UPS க்கான குழு வருவாய் 8% சரிந்து, 24.9 பில்லியனாக (அமெரிக்க டாலர்) உள்ளது, மேலும் அந்த நிறுவனத்தின் பணியாளர்களின் எண்ணிக்கை 5 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது, அதே சமயம் அறிவிக்கப்பட்ட பணிநீக்கங்கள், நிறுவனங்களின் பணியாளர்களில் 2.4 சதவீதம் பேர் ஆவர். இதன் மூலம் செலவுகளை சுமார் 1 பில்லியனாகக் குறைப்பதை இலக்காகக் கொண்டுள்ளனர் அந்த நிறுவனத்தினர்.

மறுபுறம் இந்த நிறுவனத்தின் சர்வதேச வருவாய் 7% குறைந்து 4.61 பில்லியனாக இருந்தது. விநியோகச் சங்கிலி தீர்வுகள் விற்பனை 11.4% குறைந்து 3.4 பில்லியனாக இருந்தது. 2023 ஆம் ஆண்டின் மொத்த 90.96 பில்லியனுடன் ஒப்பிடுகையில், வரவிருக்கும் ஆண்டில் 91.3 பில்லியனாக இருந்து 92.3 பில்லியனாக வருவாயில் 3.9% அதிகரிப்பை யுபிஎஸ் கண்டுள்ளது. இது 95.6 பில்லியனாக இருக்கும் LSEG கணிப்புக்கு மாறாக குறைவாக உள்ளது.

ஓய்வூதிய விதிகளில் திருத்தம்! பெண் அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் புதிய வாய்ப்பு!

Follow Us:
Download App:
  • android
  • ios