மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பாதிப்பவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை. புதிய வரி முறைக்கு மட்டுமே இந்த விலக்கு பொருந்தும்.

மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு அதிரடியாக உயர்த்தப்பட்டு இருக்கினது. இதன் மூலம் மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பாதிக்கும் எவரும் வருமான வரி செலுத்தவேண்டிய அவசியம் இருக்காது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த அறிவிப்பு மிடில் கிளாஸ் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை தாக்கல் செய்த பட்ஜெட்டில் நடுத்தர மக்களின் வரிச்சுமையைக் குறைக்கும் அறிவிப்புகள் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் நடுத்தர வர்க்கத்தினரைக் கருத்தில் கொண்டு வருமான வரி சார்ந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார்.

இதன்படி, 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரூ.12 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வீட்டு வாடகைக்கான TDS உச்ச வரம்பு ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 2 வீடுகள் வைத்திருப்பவர்கள் வருமான வரியில் சலுகை பெறலாம் என்று கூறியுள்ளார்.

🔴BUDGET 2025 LIVE | 12 லட்சம் வரை வருமான வரி கிடையாது! சூப்பர் அறிவிப்பு |Nirmala Sitharaman

Budget 2025 LIVE Updates: மாதம் ரூ.1 லட்சம் வரை ஊதியம் வாங்குவோர் இனி வரி கட்ட தேவையில்லை

புதிய வரி முறையில் அதிரடி மாற்றம்:

இந்நிலையில், புதிய வருமான வரி விலக்கு உச்ச வரம்பு எப்படி நடைமுறைப்படுத்தப்படும் என்பதை விரிவாகப் பார்க்கலாம். இந்த பட்ஜெட்டில் அறிவித்திருக்கும் ரூ.12 லட்சம் வருமான வரி விலக்கு வரம்பு புதிய வரி முறைக்கு மட்டும் பொருந்தக்கூடியது. பழைய வரி முறைக்கு இது பொருந்தாது என்பதை முதலில் நினைவில் கொள்ள வேண்டும்.

புதிய வரி முறை பின்பற்றி வருமான வரி தாக்கல் செய்பவர்கள் ரூ.4 லட்சம் வரை ஆண்டு வருமானத்துக்கு வரி விலக்கு பெறலாம். இது ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ரூ.4 லட்த்துக்கு மேல் ரூ.8 லட்சம் வரை 5% வரி செலுத்த வேண்டும். ரூ.8 லட்சத்திற்கு மேல் ரூ.12 லட்சம் வரை 10% வருமான வரி செலுத்த வேண்டும். 12 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் சம்பாதிப்பவர்களுக்கு ரூ.80,000 நிலையான கழிவு உண்டு.

அதாவது ரூ. லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டுபவர்கள் வருமான வரி செலுத்த 5% அல்லது 10% வரி நிலையான கழிவு மூலம் தள்ளுபடி செய்யப்படும். இதனால் ரூ.12,00,000 வரை ஆண்டு வருமானம் பெறுபவர்கள் வருமான வரியே செலுத்தத் தேவை இருக்காது. அதாவது மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கும் தனிநபர்கள் முழுமையான வருமான வரி விலக்கு பெறுவார்கள்.

Budget 2025: கிசான் கிரெடிட் கார்டு மூலம் ரூ.5 லட்சம் வரை கடன்! மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு!

புதிய வரி முறையில் திருத்தப்பட்ட வருமான வரி அடுக்குகள்:

Budget 2025: மத்திய பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் சொன்ன திருக்குறள்!

ரூ.12 லட்சத்துக்கு மேல்:

ரூ. 12 லட்சத்துக்கு மேல் ரூ.16 லட்சம் வரை 15% வருமான வரி செலுத்த வேண்டியிருக்கும். இதேபோல, ரூ.16 லட்சத்துக்கு மேல் ரூ.20 லட்சம் வரை வருமானம் ஈட்டினால் 20%, ரூ.20 லட்சத்துக்கு மேல் ரூ.24 லட்சம் வரை வருமானம் சம்பாதித்தால் 25% வருமான வரி செலுத்த வேண்டும். அதிகபட்சமாக ரூ.24 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் தனிநபர்கள் 30% வரி செலுத்த வேண்டும்.

புதிய வரி முறையில் கொண்டுவரப்படுள்ள இந்த மாற்றத்தின் மூலம் மிடில் கிளாஸ் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறி இருக்கிறது. வருமான வரி உச்ச வரம்பு இதற்கு முன் ரூ.50 ஆயிரம் அல்லது ஒரு லட்சம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த பட்ஜெட்டில் ரூ.10 லட்சம் வரை வரி விலக்கு அறிவிக்கப்படலாம் என பல வல்லுநர்கள் கணித்திருந்தனர். ஆனால், வரி விலக்கு வரம்பு தடாலடியாக ரூ.5 லட்சம் உயர்ந்திருக்கிறது. இது நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.