உக்ரைன்- ரஷ்யா இடையே நடந்து வரும் போரின் பாதிப்பு குறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

உக்ரைன்- ரஷ்யா இடையே நடந்து வரும் போரின் பாதிப்பு குறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் விருப்பம் தெரிவித்ததற்கு ரஷ்யா எதிர்ப்புத் தெரிவித்ததில் இருந்து போர் பதற்றம் ஏற்படத்தொடங்கியது. உக்ரைனின் இரு மாநிலங்களுக்கு சுயாட்சி அளித்து ரஷ்யா அறிவித்ததும், அந்த மாநிலங்களுக்குள் ரஷ்ய படைகள் செல்ல இருப்பதை உலகநாடுகள் கண்டித்தன.

அதுமட்டுமல்லாமல் ரஷ்யாவின் வங்கிகள், நிறுவனங்கள் மீது நிதித் தடை மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்க நிதியளிக்கத் தடை விதிக்கப்பட்டன. ஜெர்மனி, பிரிட்டனும் நிதித்தடையை ரஷ்யா மீது விதித்தன.

இதனால், பிரண்ட் கச்சா எண்ணெய்விலை வரும் நாட்களில் மேலும்அதிகரி்க்கும் என்று கூறப்பட்டது. பிரண்ட் கச்சா எண்ணெய் கடந்த இரு நாட்களுக்கு முன்புவரை பேரல் ஒன்று 98 டாலராக இருந்தநிலையில், ரஷ்யா மீது நிதித்தடை விதித்தவுடன் பேரல் 100 டாலரை எட்டியது. அமெரிக்கா வெஸ்ட் டெக்ஸ்சாஸ் சந்தை கச்சா எண்ணெய் பேரல் 96 டாலராக உயர்ந்தது. 

உக்ரைன் மீது போர் தொடுக்க ராணுவத்துக்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இன்று காலை உத்தரவிட்டபின், பிரண்ட் கச்சா எண்ணெய்விலை விர்ரென உயர்ந்து பேரல் 103 டாலரை எட்டியுள்ளது. கடந்த 2014ம் ஆண்டுக்குப்பின் கச்சா எண்ணெய் விலை 100 டாலரைக் கடந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியாவில் சாமானிய மக்கள் வரை நேரடியாக பாதிக்கும். இந்த விலை உயர்வு பெட்ரோல், டீசல், சமையல் கேஸ், சிஎன்ஜி,மண்எண்ணெய் என அனைத்திலும் ஊடுருவி, இறுதியாக சாமானிய மக்களின் பாக்கெட்டை காலி செய்யும் சக்திஉடையது. 

இந்தபாதிப்பு வரவிடாமல் தடுக்க மத்திய அரசினால் மட்டும்தான் முடியும். பெட்ரோல், டீசல் விலை உயராமல் இருக்க உற்பத்தி வரியை மத்திய அரசு குறைக்கும்பட்சத்தில் விலையைக்கட்டுக்குள் வைக்கலாம்.

இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு பாதிப்பு குறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் ஒரு சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது:

உக்ரைன்-ரஷ்யப் போரின் பாதிப்பு, கச்சா எண்ணெய் விலை உயர்வு, எரிவாயு விலை உயர்வோடு முடிந்துவிடாது, அதற்கு அப்பால் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் மீது எதிரொலிக்கும். குறிப்வாக கோதுமை மீது கடுமையாக எதிரொலிக்கலாம். அப்போது மக்கள் அதிகமான விலை கொடுக்க வேண்டி வேதனைக்குள்ளாவார்கள்.

உணவுதானியங்கள் விலை கடுமையாக உயரக்கூடும். ஏனென்றால், உலகளவில் கோதுமையை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடு ரஷ்யா, உக்ரைன்தான். இரு நாடுகளுக்கு இடையே போர் மூண்டதால்,அதன் ஏற்றுமதி பாதிக்கும்.

கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட உலகப் பொருளாதாரம் தற்போதுதான் மெல்ல மீண்டு வருகிறது. இந்த நேரத்தில் ஏற்பட்டுள்ள போரால், பொருளாதார மீட்சி என்பதுஇனிமே் கடினமாகத்தான் இருக்கும். இயற்கை எரிவாயு, எரிசக்திக்கு ஐரோப்பிய நாடுகள் இனிமேல் அதிகமாகவிலைக்கொடுக்க வேண்டியதிருக்கும்.

கச்சா எண்ணெய் பல்வேறு நாடுகளிலும் இருந்தாலும், நமக்குரிய கவலை என்பது இயற்கை எரிவாயுதான். இது மிகவும் குறைந்த அளவில்தான் இருக்கிறது, குறிப்பிட்ட இடத்தில் இருந்துதான் கிடைக்கும். அந்தவகையில் ரஷ்யாவிலிருந்துதான் அதிகமாக இயற்கை எரிவாயு கிடைக்கிறது
எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகப்படுத்தினால், பற்றாக்குறையைச் சமாளிக்கலாம்.

அதுமட்டும்லலாமல் ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் சுமூகமாகச் சென்றால், உற்பத்தி அதிகரிக்கும். தற்போது உலகளவில் நாளதோறும் 20 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் உற்பத்தியாகின்றன. இது உலகின் தேவையை நிறைவேற்ற போதாது

அமெரிக்க பெடரல் வங்கி மார்ச் மாதம் கூடி கடனுக்கான வட்டியை உயர்த்தலாம். ஆனாலும் உயரத்தும்போது சீரானநிலையைக் கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு ரகுராம் ராஜன் தெரிவித்தார்