train ticket will increase said central govt
ரயில் டிக்கெட் உயரும் அபாயம் ...
ரயில்வே துறையை பொறுத்தவரையில், பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டு வருவதாக மத்திய கணக்கு தணிக்கை குழு தெரிவித்துள்ளது. அதன்படி , இதன் காரணமாக இனி வரும் காலங்களில்,ரயில் கட்டணம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட அனைத்திலும் லாபம் பார்க்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு தொடர்ந்து விலை ஏற்றத்தையும் , மானியம் ரத்து செய்வதையும் செய்து வருகிறது . இந்நிலையில் ரயில் டிக்கெட்டிலும் கை வைக்க தொடங்கியுள்ளது மத்திய அரசு . இதன் காரணமாக மாதாந்திர பாஸ், மற்ற பிற சலுகைகள் கூட ரத்தாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஒரு வேளை ரயில் சலுகைகள் நிறுத்தப்பட்டால் மக்கள், கார் மற்றும் இருசக்கர வாகனத்தை அதிகம் பயன்படுத்த தொடங்குவர். இதன் காரணமாக டீசல் மற்றும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும், புவி வெப்பமாதல் அதிகரிக்கும். மேலும் இதன் விளைவாக நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது
