இந்திய பங்குச் சந்தையில் இன்று வாங்க சிறந்த 8 பங்குகளின் பரிந்துரைகள், அவற்றின் வாங்கும் விலை, இலக்கு விலை, மற்றும் ஸ்டாப் லாஸ் விலைகள். .
இன்று வாங்க வேண்டிய 8 சிறந்த பங்குகள்
HealthCare Global Enterprises Ltd (HCG)
வாங்கும் விலை: ₹651.55 | இலக்கு விலை: ₹700 | ஸ்டாப் லாஸ்: ₹630
பல வாரங்கள் ஒரே வரம்பில் இருந்த பங்கு, வலுவான breakout மூலம் உயர்வைத் தொடங்கியுள்ளது. நிறுவனம்: இந்தியாவின் முன்னணி புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை சங்கிலி. நவீன சிகிச்சை முறைகள், ஆராய்ச்சி மற்றும் சிறப்பு மருத்துவ சேவைகளில் முன்னிலை வகிக்கிறது.
Craftsman Automation Ltd
வாங்கும் விலை: ₹6,859 | இலக்கு விலை: ₹7,300 | ஸ்டாப் லாஸ்: ₹6,615
Higher high pattern உருவாகி, நீண்டகால உயர்வு தொடரும் சாத்தியம். நிறுவனம்: ஆட்டோமொபைல், இன்டஸ்ட்ரியல் உதிரிபாக உற்பத்தியில் முன்னணி. ஹைட்ராலிக், மெட்டல் கேஸ்டிங் மற்றும் துல்லிய உற்பத்தி தொழில்நுட்பங்களில் சிறப்பு.
Max Healthcare Institute Ltd
வாங்கும் விலை: ₹1,263 | இலக்கு விலை: ₹1,293 | ஸ்டாப் லாஸ்: ₹1,243 வலுவான ஆதரவு ₹1,243-ல் உள்ளது, மீண்டும் உயர்வு சாத்தியம்.
நிறுவனம்: இந்தியாவின் முன்னணி தனியார் மருத்துவமனை வலைப்பின்னல். டெல்லி, NCR, மும்பை போன்ற நகரங்களில் மல்டி-ஸ்பெஷாலிட்டி மருத்துவ சேவைகள் வழங்குகிறது.
SBI Cards and Payment Services Ltd
வாங்கும் விலை: ₹796 | இலக்கு விலை: ₹815 | ஸ்டாப் லாஸ்: ₹785 திடமான ஆதரவு ₹785-ல் உள்ளது; குறுகிய கால இலக்கு ₹815. நிறுவனம்: இந்தியாவின் மிகப்பெரிய கிரெடிட் கார்டு வழங்குநர்களில் ஒன்று. பல்வேறு கார்டுகள், சலுகைகள் மற்றும் டிஜிட்டல் பேமென்ட் சேவைகளில் முன்னணி.
Jubilant FoodWorks Ltd
வாங்கும் விலை: ₹629 | இலக்கு விலை: ₹665 | ஸ்டாப் லாஸ்: ₹615 ஆதரவு ₹615-ல்; பங்கு வலுவான திரும்பும் சிக்னல் காட்டுகிறது. நிறுவனம்: டொமினோஸ் பீட்சா, டங்கின் டோனட்ஸ் போன்ற உணவக பிராண்டுகளை நடத்தும் நிறுவனம். ஆன்லைன் ஆர்டர், விரைவான விநியோகத்தில் சிறந்து விளங்குகிறது.
Syrma SGS Technology Ltd
வாங்கும் விலை: ₹718 | இலக்கு விலை: ₹755 | ஸ்டாப் லாஸ்: ₹700 RSI மீண்டும் உயர்வைச் சுட்டுகிறது, மேலும் முன்னேற்றம் சாத்தியம். நிறுவனம்: எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி சேவைகளில் முன்னணி. ஆட்டோமொபைல், ஹெல்த்கேர், கன்சூமர் எலக்ட்ரானிக்ஸ் துறைகளுக்கு உற்பத்தி, PCB அசெம்ப்ளி சேவைகள்.
Swiggy Ltd
வாங்கும் விலை: ₹400 | இலக்கு விலை: ₹424 | ஸ்டாப் லாஸ்: ₹388 50EMA ஆதரவிலிருந்து பங்கு மீள்வு, வாங்கும் சிக்னல். நிறுவனம்: இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு விநியோக தளம். Instamart மூலம் மளிகை மற்றும் ஹைபர்-லோகல் டெலிவரி சேவைகளில் விரிவடைந்து வருகிறது.
LT Foods Ltd
வாங்கும் விலை: ₹467 | இலக்கு விலை: ₹490 | ஸ்டாப் லாஸ்: ₹456 50EMA-வை மீறி உயர்வு தொடரும் வாய்ப்பு. நிறுவனம்: ‘டாவட்’ பிராண்டின் மூலம் பாஸ்மதி அரிசி உற்பத்தி மற்றும் உலகளாவிய ஏற்றுமதி செய்யும் முன்னணி உணவுப் பொருள் நிறுவனம்.
