சுங்கச்சாவடி கட்டணம் திடீர் உயர்வு..!

https://static.asianetnews.com/images/authors/e065074c-8e18-5858-afb6-5be406a1a979.jpg
First Published 1, Sep 2018, 12:18 PM IST
toll gate fair increased
Highlights

தமிழ்நாட்டில் 14 சுங்கச் சாவடிகளில் 5 சதவீதம் முதல் 10 சதவீதம்வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. நாளை முதல் இது அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 14 சுங்கச் சாவடிகளில் 5 சதவீதம் முதல் 10 சதவீதம்வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. நாளை முதல் இது அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திண்டிவனம்- உளுந்தூர்பேட்டை 72.9 கி.மீ. தூர நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி, திருச்சி- திண்டுக்கல் 82.27கி.மீ. சாலையில் பொன்னம் பலப்பட்டி சுங்கச் சாவடி உள்பட 14 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி சுங்கச் சாவடியில் கார்களுக்கு ரூ.80, 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.75 வசூலிக்கப்படும். இதன் மூலம் இந்த சாலையில் ஒரு கி.மீக்கு ரூ.1.09 வசூலிக்கப்படுகிறது.

பொன்னம்பலப்பட்டி சுங்கச் சாவடியில் கி.மீ.க்கு ரூ.2.02 அளவுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இது போல் மற்ற 12 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு வாகன உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழ் நாட்டில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் சுங்கச்சாவடிகளில் பெருமளவில் கட்டணம் வசூலாகிறது. ஆனால் சாலைகள் பராமரிப்பு மோசமாக உள்ளதாக குற்றம் சாட்டினார்கள்.

குமாரபாளையம்- செங்கம் பள்ளி சாலையில் விஜயமங்கலம் சுங்கச் சாவடியில் நாள்தோறும் 80,413 வாகனங்கள் செல்கின்றன. இதன் மூலம் தினமும் ரூ.19.47 லட்சம் வசூலாகிறது. ஆனால் இந்த சாலை 40,000 வாகனங்கள் செல்லும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டது. அதைவிட இரு மடங்கு வாகனங்கள் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் இதுவரை 250 சதவீதம் அளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 2009-ல் சுங்கச்சாவடிகளில் கி.மீக்கு 40 பைசாவாக இருந்த கட்டணம் இப்போது ரூ.1.08 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாளை முதல் கட்டணம் உயர்த்தப்படும் சுங்கச்சாவடிகள் வருமாறு:-

1. நல்லூர் (சென்னை- தடாசாலை), 2. வைகுந்தம் (சேலம்-குமாரபாளையம்), 3.எலியார்பத்தி (மதுரை- தூத்துக்குடி), 4. கொடைரோடு (திண்டுக்கல்- சமயநல்லூர்), 5. மேட்டுப்பட்டி (சேலம்- உளுந்தூர்பேட்டை), 6. மன்வாசி (திருச்சி-கரூர்), 7. விக்கிரவாண்டி (திண்டி வனம்- உளுந்தூர்பேட்டை).

8. பொன்னம்பலம்பட்டி (திருச்சி-திண்டுக்கல்), 9. நந்தக்கரை(சேலம்-உளுந்தூர் பேட்டை), 10. புதூர் பாண்டியபுரம் (மதுரை- தூத்துக்குடி), 11. திருமந்துரை (ஊளுந்துர்பேட்டை- பாடலூர்), 12. வாழவந்தான் கோட்டை (தஞ்சை- திருச்சி), 13. வீரசோழபுரம் (சேலம்-உளுந்தூர்பேட்டை), 14. விஜயமங்கலம் (குமார பாளையம்- செங்கம் பள்ளி). #Tollgate  

loader