பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலை நிலவரப்படி இன்றும் விற்கப்பட்டு வருகிறது.

கடந்த 15 ஆண்டு காலமாக மாதம் இரு முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைக்கும் முறையில் மாற்றம் கொண்டு வந்து, இப்போது தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படும் என பெட்ரோல் நிறுவனங்கள் முடிவு செய்து அதன்படி தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாகவே ஏறுமுகத்தில் இருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் தற்போது இறங்குமுகம் காணப்பட்டு வருகிறது அதன்படி, நேற்று லிட்டருக்கு ரூ.73.29 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.14 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

இன்று  இந்த விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே இன்று விற்கப்பட்டு வருகிறது.