இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம் என்ன என்று பார்க்கலாம்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு :
பொதுவாக, சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு.

சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களைப் பொறுத்து எண்ணெய் விலையை, இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் தீர்மானித்து வருகின்றன. இதன் எதிரொலியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெட்ரோல் விலை ரூ.100ஐ தொட்டது. இதனால் சாமானியர்கள் கலக்கம் அடைந்தனர்.
மீண்டும் உயர்வு :

5 மாநில தேர்தல் முடிந்த நிலையில், ரஷ்ய உக்ரைன் போரை காரணம் காட்டி மீண்டும் பெட்ரோல் டீசல் விலை கடந்த 22ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் சென்னையில் பெட்ரோல், விலை இன்று லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.103.67 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்தது ரூ.93.71காசுகளுக்கும் விற்பனையாகிறது.
