crude oil price today:சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோதிலும், கடந்த 4 மாதங்களாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்ததால், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம்நிறுவனங்களுக்கு ரூ.19ஆயிரம் கோடி இழப்பு(2250 கோடி டாலர்) ஏற்பட்டுள்ளது என்று மூடிஸ் முதலீட்டுச் சேவை நிறுவன ஆய்வு தெரிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோதிலும், கடந்த 4 மாதங்களாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்ததால், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம்நிறுவனங்களுக்கு ரூ.19ஆயிரம் கோடி இழப்பு(2250 கோடி டாலர்) ஏற்பட்டுள்ளது என்று மூடிஸ் முதலீட்டுச் சேவை நிறுவன ஆய்வு தெரிவித்துள்ளது.

நிறுத்தம்

5 மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்துவது நிறுத்தப்பட்டது. அதன்பின் 4 மாதங்களாக 2022, மார்ச் 21ம் தேதிவரை விலை உயர்த்தப்படவில்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்விலை 140 டாலரை எட்டியபோதுகூட பெட்ரோல்,டீசல் விலை உயரவில்லை. 

விலை உயர்வு

நவம்பர் 4ம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிறுத்திவைக்கப்பட்டபோது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்விலை பேரல் 81 டாலராக இருந்தது. ஆனால், அதன்பின் 25 சதவீதம் அதிகரித்து பேரல் தற்போது 111 டாலர் வரை சென்றது.

இந்நிலையில் 4 மாதங்களுக்குப்பின் கடந்த இரு நாட்களாக பெட்ரோல், டீசலில் லிட்டருக்கு 80 காசுகள் உயர்த்தப்பட்டன.ஆனால் இன்று விலை உயர்த்தப்படவில்லை

இந்நிலையில் ரேட்டிங் நிறுவனமான மூடிஸ் முதலீட்டாளர்கள் சேவை நிறுவனம் ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பேரலுக்கு ரூ.1900 டாலர் இழப்பு

சந்தையில் உள்ள நடப்பு விலையின்படி, இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் இருப்பதால், கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 25 டாலர் வருவாய் இழப்பு(ரூ.1900) ஏற்படுகிறது

ரூ.19ஆயிரம் கோடி

கச்சா எண்ணெய் விலை பேரல் சராசரியாக 111 டாலராக இருக்கும் பட்சத்தில், சர்வதேச சந்தைவிலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை உயர்த்தாமல் இருந்தால், இந்த மூன்றுஎண்ணெய் நிறுவனங்களுக்கும் தினசரி வருவாய் இழப்பு 6 முதல் 7 கோடி டாலராக இருக்கும். 
எங்களின் கணக்கின்படி, நவம்பர் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் இருந்ததால், 3 எண்ணெய் நிறுவனங்களுக்கும் ரூ.19ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும். 

இதில் இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு மட்டும் 1000 கோடி டாலர் முதல் 1100 கோடி டாலர் வரை இருக்கும். பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு 550 கோடி டாலரும், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு 650 கோடி டாலரும் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும். எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து இழப்பில் சிக்குவதைத் தவிர்க்க மத்திய அரசு விலையை சுதந்திரமாக நிர்ணயிக்க அனுமதிக்கும்என்று நம்புகிறோம். 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தபோதிலும் 2021,நவம்பர் 4 முதல் 2022, மார்ச் 21ம் தேதிவரை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களால் உயரத்த முடியாத சூழல் இருந்தது. இது எண்ணெய் நிறுவனங்களின் லாபத்தை பாதித்துவிட்டது. 
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.