Gold Rate Today : ரஷ்யா மீதான பொருளாதார தடைகள், பெரும்பாலான பொருட்களின் விலையை உயர்த்துவதற்கு வழிவகுக்கும் என்று கணிக்கப்பட்டது போன்றே உலகம் முழுவதும் விலை உயர்வை ஏற்படுத்தி உள்ளது. 

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியுள்ளது. இதனால், கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. தங்கத்தை வாங்குவதில் பெண்களின் ஆர்வம் என்றைக்கும் குறைந்ததில்லை. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன ? என்று பார்க்கலாம். 

இன்றைய தங்க விலை :

இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,969 ஆக அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரணத் தங்கம் 48 ரூபாய் அதிகரித்து, 39,752 ஆக அதிகரித்து உள்ளது.

இன்றைய வெள்ளி விலை :

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.73.30 ஆக இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 73,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : தனுஷ்கோடி வர 2.5 லட்சம் செலவு.. இலங்கையில் இருந்து 2 குழந்தைகளுடன் வந்த இளம்பெண் தகவல் !!