Asianet News TamilAsianet News Tamil

tmb ipo: tmb share price: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கிப் பங்குகளை 3 மடங்கு வாங்கிய சில்லரை முதலீட்டாளர்கள்

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கிப் பங்குகள் விற்பனையான ஐபிஓவில் 3 மடங்கு பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கிக் குவித்துள்ளனர்.

tmb ipo: tmb share price: Strong customer demand drove 2.9x of the IPO subscriptions for Tamilnad Mercantile Bank.
Author
First Published Sep 8, 2022, 2:02 PM IST

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கிப் பங்குகள் விற்பனையான ஐபிஓவில் 3 மடங்கு பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்கிக் குவித்துள்ளனர்.

தகுதியுள்ள நிறுவன முதலீட்டாளர்கள் தரப்பில் 1.62 மடங்கும், அதிகசொத்துள்ள தனிநபர்கள் 2.94 மடங்கும், சில்லரை வர்த்தகர்கள் 6.5மடங்கும் பங்குகளை வாங்கிக் குவித்துள்ளனர்.

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் பொதுப்பங்கு வெளியீடு 5ம்தேதி  தொடங்கி நேற்று(7ம் தேதி) முடிந்தது. ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு கடந்த 2ம் தேதி தொடங்கியது, இதில் ஆங்கர் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.363 கோடி திரட்டியுள்ளது. ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு ரூ.510 என்ற விலையில் பங்கு விற்கப்பட்டது.

tmb ipo: tmb share price: Strong customer demand drove 2.9x of the IPO subscriptions for Tamilnad Mercantile Bank.

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சிஇஓ-வாக சங்கரசுப்பிரமணியம் பொறுப்பேற்பு

பஜாஜ் அலைன்ஸ் லைப் இன்சூரன்ஸ், நோமுரா சிங்கப்பூர், மேக்ஸ் லைப் இன்சூரன்ஸ், சொசைட்டி ஜெனரல், கோடக் மகந்திரா லைப் இன்சூரன்ஸ், சோழமண்டலம் எம்எஸ்ஜெனரல் இன்சூரன்ஸ், ஆதும் இன்வெஸ்ட்மென்ட், அல்கெமிக் வென்சர்ஸ் பண்ட் ஆகியோர் ஆங்கர் முதலீட்டாளர்கள்.

கிரேமார்க்கெட்டில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கிப் பங்குகள் ரூ.555 விலையில் விற்கப்படுகின்றன.அதாவது ஐபிஓ விலையைவிட 5 சதவீதம் கூடுதலாக விலைக்கு விற்கப்படுகிறது

சலுகை விலையில் 15.84 மில்லியன் பங்குகளை டிஎம்பி வங்கி விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் ரூ.832 கோடியை டிஎம்பி வங்கி திரட்டுகிறது. இதன் மதிப்பு சந்தையில் ரூ.8,314 கோடியாகும். 

பங்கு வெளியீடு தொடர்பாக ஐபிஓ ஆவணங்களை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் செபியிடம் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி தாக்கல் செய்தது, அதற்கு கடந்த மே மாதம் 30ம் தேதி செபி அனுமதியளித்துள்ளது.

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி ஐபிஓ இன்று வெளியீடு: பங்கு விலை தெரியுமா? கிரே மார்க்கெட் விலை என்ன?

tmb ipo: tmb share price: Strong customer demand drove 2.9x of the IPO subscriptions for Tamilnad Mercantile Bank.

தமிழ்நாடு மெர்கன்டல் வங்கி 100 ஆண்டுகள் பழமையான நம்பகத்தன்மையான வங்கியாக மக்கள் மத்தியில் விளங்கி வருகிறது. சிறு, குறு,நடுத்தர நிறுவனங்கள், வேளாண்மை மற்றும் சில்லரை வர்த்தகர்கள் ஆகிோயருக்கு பல்வேறு விதங்களில் கடனுதவியும், நிதிச்சேவையையும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி அளித்து வருகிறது.

75 சதவீத முதலீடு நிறுவன முதலீட்டாளர்களிடமும், 15 சதவீதம் நிறுவனமில்லாத முதலீட்டாளர்களிடமும், 10 சதவீதம் சில்லரை முதலீட்டாளர்களிடமும் முதலீடு திரட்ட வங்கி முடிவு செய்தது. 

ncrb: 2021ம் ஆண்டில் பிடிபட்ட கள்ளநோட்டுகளில் 60% ரூ.2ஆயிரம் நோட்டுகள்: என்சிஆர்பி தகவல்

2021, ஜூன்30ம்தேதி நிலவரப்படி, 509 கிளைகள் டிஎம்பி வங்கிக்கு உள்ளன. இதில் 247 வங்கிகள் சிறு நகரங்களிலும், 106 கிளைகள் கிராமங்களிலும், 80 கிளைகள் நகர்புறங்களிலும், 76 கிளைகள் மெட்ரோ நகரங்களிலும் செயல்படுகின்றன. 

ஏறக்குறைய 49.30 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளன, இதில் 70சதவீதத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் 5 ஆண்டுகளுக்கும்மேலாக வங்கியில் தொடர்ந்து பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios