ncrb: 2021ம் ஆண்டில் பிடிபட்ட கள்ளநோட்டுகளில் 60% ரூ.2ஆயிரம் நோட்டுகள்: என்சிஆர்பி தகவல்
2021ம் ஆண்டு பிடிபட்ட கள்ள நோட்டுகளில் 60 சதவீதம் 2ஆயிரம் ரூபாய் நோட்டுகள் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம்(என்சிஆர்பி) தெரிவித்துள்ளது.
2021ம் ஆண்டு பிடிபட்ட கள்ள நோட்டுகளில் 60 சதவீதம் 2ஆயிரம் ரூபாய் நோட்டுகள் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம்(என்சிஆர்பி) தெரிவித்துள்ளது.
2021ம் ஆண்டில் மொத்தம் ரூ.20.39 கோடி கள்ளநோட்டுகள் பிடிபட்டுள்ளன. இதில் ரூ.12.18 கோடி நோட்டுகள் ரூ.2ஆயிரம் நோட்டுகளாகும்.
கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு கொண்டுவரப்பட்டபின் ரூ.2ஆயிரம் நோட்டு, புதிய ரூ.500 நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டில் புழக்கத்தில் உள்ள கள்ளநோட்டுகளை ஒழிக்கவும், தீவிரவாதிகள் கைகளில் கள்ளநோட்டுகள் சேராமல் தடுக்கவும் முக்கியமாகவே பணமதிப்பிழப்பு கொண்டுவரப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.
ஆனால், 2021ம் ஆண்டில் ரூ.20.39 கோடிக்கு கள்ளநோட்டுகள் பிடிப்பட்டுள்ளது. இதனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவந்த நோக்கம் தோல்வியில் முடிந்ததா என்ற கேள்வியும் எழுகிறது.
அதுமட்டுமல்லாமல் பணமதிப்பிழப்புக்குப்பின் நாட்டில் பிடிபடும் கள்ளநோட்டுகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக என்சிஆர்பி புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
என்சிஆர்பி ஆதாரங்கள்படி, “ 2016ம்ஆம்டில் ரூ.15.92 கோடிக்கு கள்ளநோட்டுகள் பிடிபட்டன, 2017ம் ஆண்டில் ரூ.28.10 கோடி, 2018ம்ஆண்டில் ரூ.17.95 கோடி, 2019ம் ஆண்டில் ரூ.25.39 கோடி, 2020ம் ஆண்டில் ரூ.92.17 கோடி, 2021ம் ஆண்டில் ரூ.20.39 கோடிக்கு கள்ளநோட்டுகள் பிடிபட்டுள்ளன. 2015ம்ஆண்டு அதாவது பணமதிப்பிழப்பு நடக்காததற்கு முன் ரூ.15.48 கோடிதான் கள்ளநோட்டுகள் பிடிபட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
2020ம் ஆண்டு ஏறக்குறைய ரூ.92 கோடி அளவுக்கு கள்ளநோட்டுகள் அதிகரித்தது. புனேயில் ஒரு வீட்டிலிருந்து சில்ட்ரன் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்ட போலி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 2020, ஜூன் 10ம் தேதி ரூ.82.80 கோடிக்கு கள்ளநோட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதில் ரூ.43 கோடிக்கு ரூ.2ஆயிரம் நோட்டுகளாகும். இது தொடர்பாக ராணுவவீரர் உள்பட 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
2021ம் ஆண்டு அறிக்கையின்படி, ரூ.6.60 கோடிக்கு ரூ.500 கள்ள நோட்டுகளும், ரூ.45 லட்சத்துக்கு ரூ.200 கள்ளநோட்டுகளும் பிடிபட்டுள்ளன.
இதற்கு முன் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ இந்திய கரன்ஸிகளை அச்சடித்து, இந்திய ரூபாய்க்கும், அவர்கள் அச்சடிக்கும் கரன்ஸிக்கும் வேறுபாடு தெரியாமல் புழக்கத்தில் விடுவதாக மத்திய அ ரசு குற்றம்சாட்டியது.
ரூ.2 ஆயிரம் போலி நோட்டுகள் அதிகபட்சமாக ரூ.5 கோடிக்கு தமிழகத்தில் கைப்பற்றப்பட்டன, அடுத்ததாக கேரளாவில் ரூ.1.80 கோடியும், ஆந்திராவில் ரூ.ஒரு கோடியும் கைப்பற்றப்பட்டன.
வங்கதேசத்து பெண்ணை மணந்த தமிழ் பெண்! பாரம்பரிய முறைப்படி சென்னையில் நடந்த திருமணம்
கடந்த மாதம் 8ம்ததேதி மத்திய நிதிஅமைச்சகம் நாடாளுமன்றத்தில் அளித்த தகவலின்படி, “ போலி ரூாபய் நோட்டுகள் வங்கிக்கு வருவது குறைந்துவிட்டது. ரூ.2016-17ம் ஆண்டில் ரூ.43.47 கோடியாக இருந்த நிலையில், 2021-22ம் ஆண்டில் ரூ.8.26கோடியாகக் குறைந்துவிட்டதாகத்தெரிவித்தது.
2016-17ம் ஆண்டில் 7.62 லட்சம் எண்ணி்க்கையில் போலிரூபாய் நோட்டுகள் இருந்தன, இது 2020-21ம் ஆண்டில் 2.09 லட்சம் நோட்டுகளாகக் குறைந்துவிட்டது எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.