tmb ipo: tmb share price: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சிஇஓ-வாக சங்கரசுப்பிரமணியம் பொறுப்பேற்பு
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலாண் இயக்குநராக கிருஷ்ணன் சங்கரசுப்பிரமணியம் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் மேலாண் இயக்குநராக கிருஷ்ணன் சங்கரசுப்பிரமணியம் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதற்கு முன் சிஇஓவாக இருந்த ராமமூர்த்தியின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து, அடுத்த 3 ஆண்டுகளுக்கு, கே.வி.ராம மூர்த்தி பொறுப்பேற்றுள்ளார். இவரின் நியமனத்துக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
டிஎம்பி வங்கியின் சிஇஓ-வாக கிருஷ்ணன் சங்கரசுப்பிரமணியம் பொறுப்பேற்கும் முன், பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் மேலாண் இயக்குநராக, சிஇஓவாக இருந்தார். இவரின் பதவிக்காலத்தில் பஞ்சாப் சிந்து வங்கி 2021-22ம்ஆண்டில் இதுவரை இல்லாத அளவு அதிகமான லாபத்தை ஈட்டியது.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் படித்த சங்கரசுப்பிரமணியம்,சிஏ. முடித்தவர். சின்டிகேட் வங்கியில் நிர்வாக அதிகாரியாக இருந்து அதன்பின் பஞ்சாப் சிந்து வங்கிக்கு சிஇஓ-வாக பணியாற்றினார்.
சின்டிகேட் வங்கியில் சங்கரசுப்பிரமணியம் பணியாற்றியபோது, வங்கியின் அனைத்துப் பிரிவுகளையும் கண்காணித்தார், குறிப்பாக கார்ப்பரேட் கடன், கையிருப்பு, இடர்மேலாண்மை, மனிதவளம் அனைத்தையும் கவனித்தார். கடந்த 30 ஆண்டுகால வங்கி அனுபவம் மிக்க சங்கரசுப்பிரமணியம், வங்கியின் அனைத்துப் பிரிவுகளிலும் தேர்ந்த அனுபவம் உடையவர். குறிப்பாக இடர்மேலாண்மை, தகவல்தொழில்நுட்ப பாதுகாப்பு, மனிதவளம் ஆகியவற்றில் சிறப்பாக சங்கரசுப்பிரமணியம் செயல்படக்கூடியவர் என்று வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின்(TMB) ஐபிஓ இன்று( 5ம் தேதி) தொடங்கி வரும் 7ம் தேதிவரை நடக்கிறது. ஒரு பங்கு விலை ரூ.500 முதல் ரூ.525 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு கடந்த 2ம் தேதி தொடங்கிவிட்டது.
ஆங்கர் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.363 கோடி திரட்டியுள்ளது. ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு ரூ.510 என்ற விலையில் பங்கு விற்கப்பட்டுள்ளது
ncrb: 2021ம் ஆண்டில் பிடிபட்ட கள்ளநோட்டுகளில் 60% ரூ.2ஆயிரம் நோட்டுகள்: என்சிஆர்பி தகவல்
கிரேமார்க்கெட்டில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கிப் பங்குகள் ரூ.555 விலையில் விற்கப்படுகின்றன.அதாவது ஐபிஓ விலையைவிட 5 சதவீதம் கூடுதலாக விலைக்கு விற்கப்படுகிறது
பஜாஜ் அலைன்ஸ் லைப் இன்சூரன்ஸ், நோமுரா சிங்கப்பூர், மேக்ஸ் லைப் இன்சூரன்ஸ், சொசைட்டி ஜெனரல், கோடக் மகந்திரா லைப் இன்சூரன்ஸ், சோழமண்டலம் எம்எஸ்ஜெனரல் இன்சூரன்ஸ், ஆதும் இன்வெஸ்ட்மென்ட், அல்கெமிக் வென்சர்ஸ் பண்ட் ஆகியோர் ஆங்கர் முதலீட்டாளர்கள்.
- BSE
- Initial public offering
- Krishnan Sankarasubramaniam
- NSE
- Sensex
- Tamilnad Mercantile Bank Limited
- Tamilnad Mercantile Bank MD
- bse
- gmp
- gmp ipo
- ipo
- ipo today
- nifty
- share market today
- sharemarket live
- sharemarket update
- stock market
- stock market today
- stockmarket update
- stockmarketlive
- tamilnad mercantile bank ipo
- tamilnad mercantile bank share price
- tmb ipo
- tmb ipo date
- tmb share price