tiktok return :இந்தியாவிலிருந்து தடை செய்யப்பட்ட சீனாவின் டிக்டாக் செயலி மீண்டும் தனது வர்த்தகத்தை இந்தியாவுக்குள் கொண்டு வருவதற்கு முயற்சி எடுத்துவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவிலிருந்து தடை செய்யப்பட்ட சீனாவின் டிக்டாக் செயலி மீண்டும் தனது வர்த்தகத்தை இந்தியாவுக்குள் கொண்டு வருவதற்கு முயற்சி எடுத்துவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் சமூக ஊடக நிறுவனமான பைட்டான்ஸ் , இந்தியாவின் ஹிராநந்தினி குழுமத்துடன் இணைந்து மீண்டும் தனது செயலியை அறிமுகம் செய்ய பேசி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பைட்டான்ஸ் நிறுவனம்தான் டிக்டாக் செயலியை வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக டிக்டாக் செயலியின் அதிகாரிகள், இந்தியாவில் தங்களின் முன்னாள் ஊழியர்களையும் தொடர்பு கொண்டு பேசியுள்ளது, புதிதாக வேலைக்கு ஆட்களை எடுக்கவும் பேசி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
நாட்டின் இறையான்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் 100க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு மத்திய அரசு கடந்த 2021ம் ஆண்டு தடை விதித்தது. இந்த தடையால் சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்தின் டிக்டாக் செயலியும் தடை செய்யப்பட்டு இந்தியாவிலிருந்து வெளியேறியது.
இந்நிலையில் ஓர் ஆண்டு இடைவெளிக்குப்பின் வேறு வழியில் இ்ந்தியாவுக்குள் தனது வர்த்தகத்தை தடம் பதிக்க பைட்டான்ஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது.
மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “ நாங்கள் அனைத்து விவரங்களையும் தெரிவித்துள்ளோம். அந்த நிறுவனம் எங்களிடம் மீண்டும் அனுமதிக்கு விண்ணப்பத்தைஅளித்துள்ளது.அதை பரிசீலிப்போம்.

இதுதொடர்பாக எந்த விதமான முறையான விவாதங்களும் நடக்கவில்லை. டெல்லி, பெய்ஜிங் இடையிலான அரசியல்ரீதியான பிரச்சினை என்பதால், சீனாவைச் சேர்ந்த டிக்டாக் உள்ளிட்ட எந்த செயலிக்கும் அனுமதியளிப்பது என்பது அரசியலோடு தொடர்புடையது. இந்தியாவில் மீண்டும் வர்த்தகம் தொடங்க சீன நிறுவனம்ஆர்வத்துடன் இருக்கிறது. உறுதியாக எந்த முடிவையும் அந்த நிறுவனமும்எடுக்கவில்லை. சீன நிறுவனத்தை அனுமதிக்கும் முடிவு அரசின் கையில்தான் இருக்கிறது” எனத் தெரிவித்தார்
அதுமட்டுமல்லாமல் பயனாளிகள் குறித்தவிவரங்களை இந்தியாவுக்கு வெளியே எங்கும் சேமிக்கக்கூடாது, இந்திய விதிமுறைகளுக்கு உட்பட்டு அனைத்து செயலிகளையும் மறுமாற்றம்செய்ய வேண்டும். இதுபோன்ற இந்திய விதிகளுக்கு கட்டுப்பாட்டால்தான் மீண்டும் டிக்டாக் இந்தியாவுக்குள்வர முடியும் என மற்றொரு அதிகாரி தெரிவித்தார்
