வங்கி கணக்கு இல்லாமலே சம்பளத்தை வாங்க “கேஷ் கார்டு “..!!!!

கருப்புபண ஒழிப்பு நடவடிக்கையாக , ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டவுடன் , தற்போது வங்கியில் டெபாசிட் செய்த பணத்தை கூட எடுக்க முடியாத நிலை உருவாகி உள்ளது.

இந்நிலையில், வங்கி கணக்கு இல்லாமல் சம்பளத்தை பெரும் பொதுமக்களுக்கு ஏதுவாக , இந்த “கேஷ் கார்டு “ வசதியை இந்தியன் வங்கி அறிமுகம் செய்துள்ளது.

பொதுமக்களும், நலிந்த பிரிவினர், அமைப்புசாரா தொழி லாளர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் இந்தியன் வங்கி ‘கேஷ் கார்டு’-ஐ அறிமுகப்படுத்தி யுள்ளது.

இந்த கார்டை பயன்படுத்தி, ஒரு நாளைக்கு சும்மார் 50 ஆயிரம் வரை , பணத்தை எடுக்கவோ, அல்லது பொருட்களை வாங்கவோ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், நாடு முழுவதும் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் 2 லட்சத்திற்கு மேற்பட்ட ஏ டி எம் மையங்களிலும் , இந்த பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இதனால், வங்கி கணக்கு இல்லாமல் சம்பளத்தை பெரும் பொதுமக்களுக்கு ஏதுவாக , இந்த “கேஷ் கார்டு “ வசதியை இந்தியன் வங்கி அறிமுகம் செய்துள்ளது.

மேலும், நகை கடன் வசதி பெறுவதற்கென இந்தியன் வங்கி தங்கள் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆப்ஸ் மூலம் , நாம் வங்கிக்கு செல்ல உகந்த நேரத்தை , முன்னதாகவே பதிவு செய்துவிட்டு , வங்கிக்கு செல்லலாம்.

இதனால், தேவை இல்லாமல் நேரம் வீணாவது தவிர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.