சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவும் ஆயிரக்கணக்கான ஊழியர்களைக் குறைத்து வருகின்றன. பொருளாதார மந்தநிலை மற்றும் AI தொழில்நுட்ப வளர்ச்சி இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இதனால், AI தொடர்பான திறன்களைக் கொண்டவர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.
IT நிறுவனங்களில் ஆட்குறைப்பு
சர்வதேச அளவில் புகழ்பெற்ற முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவும் ஊழியர்கள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், நடப்பாண்டின் முதல் 5 மாதங்களில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர். கூகிள், மைக்ரோசாஃப்ட், அமேசான் போன்ற பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய சைபர் செக்யூரிட்டி நிறுவனங்கள் வரை ஊழியர்களைக் குறைத்து வருகின்றன.
61,300க்கும் மேற்பட்டோர் வேலை இழப்பு
2025 தொடக்கத்தில் இருந்து 130க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 61,300க்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். கிளவுட், விளம்பரம், மனிதவளம், சாதனங்கள், மென்பொருள் மற்றும் விற்பனைத் துறைகளில் இந்த பணிநீக்கங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால் இதற்கு காரணம் மந்தநிலையோ சந்தை வீழ்ச்சி அல்ல எனவும் மாறாக தொழில் நுட்ப வளர்ச்சியே காரணம் எனவும் பொருளாதார நிபுணர்கள் தெரித்துள்ளனர்.
எந்த நிறுவனத்தில் எத்தனை பேர் வேலை இழப்பு
மைக்ரோசாஃப்ட் - பணிநீக்கம்- 6,000 பேர்
கூகுள் - வேலை இழப்பு- மே 2025ல் GBO பிரிவில் 200 ஊழியர்கள் நீக்கம்
பாதிக்கப்பட்ட பிரிவுகள்- பிக்சல், ஆண்ட்ராய்டு, குரோம், கூகிள் கிளவுட்
அமேசான்
பணிநீக்கம்- 100 பேர், குறிப்பாக Alexa மற்றும் Zoox சேவைகளில்
CrowdStrike
பணிநீக்கம்- உலகளாவிய பணியாளர்களில் 5%
IBM
பணிநீக்கம்- நூற்றுக்கணக்கானோர், குறிப்பாக மனிதவளம் மற்றும் நிர்வாகத் துறைகளில்
2025ல் ஏன் இவ்வளவு பணிநீக்கம்
உலகப் பொருளாதார மந்தநிலை அதிக வட்டி விகிதம், பணவீக்கம் மற்றும் உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றம் ஆகியவை முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும் இப்போது AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு மற்றும் ChatGPT, Bard,Copilot போன்ற AI கருவிகள் கோடிங் முதல் வாடிக்கையாளர் சேவை வரை உதவுவதால் ஆட்குறைப்பு தொடர்வதாக கூறப்படுகிறது.
டெக் துறையில் வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும்
இந்த பணிநீக்கங்கள் செலவுகளைக் குறைப்பதற்காக மட்டுமல்ல, டிஜிட்டல் பணியாளர்களை மறுவடிவமைக்கவும் முயற்சிக்கின்றன. நிறுவனங்கள் AI-ஐ மையமாகக் கொண்டு எதிர்காலத் திட்டங்களை வகுக்கின்றன. எனவே, புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளத் தயாராக இருப்பவர்களுக்கு, குறிப்பாக AI மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான திறன்களைக் கொண்டவர்களுக்கு, வேலைவாய்ப்பு சந்தை சாதகமாக இருக்கும்.
