tcs share: டிசிஎஸ் நிறுவனத்தின் லாபம் 4-வது காலாண்டில் ரூ.9,926 கோடியாக அதிகரிப்பு: 40,000 பேருக்கு வேலை ரெடி

tcs share : டாடா கன்சல்டன்சி சர்வீஸ்(டிசிஎஸ்) நிறுவனத்தின் 4-வது காலாண்டு முடிவுகளில் அந்நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஆண்டைவிட 7.4 சதவீதம் அதிகரித்து, ரூ.9ஆயிரத்து 926 கோடியாக அதிகரித்துள்ளது.

tcs share : TCS Q4 profit rises 7.4% to rs 9,926 crore

டாடா கன்சல்டன்சி சர்வீஸ்(டிசிஎஸ்) நிறுவனத்தின் 4-வது காலாண்டு முடிவுகளில் அந்நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஆண்டைவிட 7.4 சதவீதம் அதிகரித்து, ரூ.9ஆயிரத்து 926 கோடியாக அதிகரித்துள்ளது.

டிசிஎஸ் நிறுவனத்தின் 4-வது காலாண்டு வருவாய் ரூ.50ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டைவிட 350 கோடி டாலர் அதிகரித்துள்ளது.

tcs share : TCS Q4 profit rises 7.4% to rs 9,926 crore

டிசிஎஸ் லாபம்

டிசிஎஸ் நிறுவனத்தின் வருவாயைப் பொறுத்தவரையில் கடந்த காலாண்டைவிட 15.8சதவீதம் அதிகரித்து, ரூ.50ஆயிரத்து 591 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டு முழுமையாக டிசிஎஸ் நிறுவனம் 14.8% சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது, ரூ.38ஆயிரத்து 327 கோடி நிகர லாபமீட்டியுள்ளது. வருவாய் அடிப்படையில் 16.8சதவீதம் அதிகரித்து, ரூ.ஒரு லட்சத்து 91ஆயிரத்து 754 கோடியாக உயர்ந்துள்ளது.

சிறந்த வளர்ச்சி

டிசிஎஸ் நிறுவனத்தின் 4-வது காலாண்டு வளர்ச்சி குறித்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் கோபிநாதன் கூறுகையி்ல் “ 4-வது காலாண்டு முடிவுகள் ஸ்திரமாக வந்துள்ளன, நிதியாண்டை மிகவும் வலிமையாக முடித்திருக்கிறோம். கொரோனா பாதிப்பு இருந்தபோதிலும் மீண்டு வந்துள்ளது. நிதிச்சூழல், உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் நல்ல நிலையில் உள்ளன.

4-வது காலாண்டில் 1130 கோடி டாலருக்கு ஆர்டர் கிடைத்திருக்கிறது. இந்த காலாண்டிலும்கிடைக்காத ஆர்டர் இதுவாகும். கடந்த நிதியாண்டு முழுமையாக 3460 கோடி டாலருக்கு ஆர்டர் கிடைத்தது. 

tcs share : TCS Q4 profit rises 7.4% to rs 9,926 crore

4-வது காலாண்டில் டிசிஎஸ் நிறுவனம் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக வளர்ச்சி அடைந்துள்ளது. அனைத்து கிளைகளிலும் இந்த வளர்ச்சி நன்றாக இருக்கிறது, குறிப்பாக வடஅமெரிக்காவில் நல்ல வளர்ச்சி இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

40ஆயிரம் பேருக்கு புதிதாக வேலை

டிசிஎஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கணபதி சுப்பிரமணியன் கூறுகையில் “ எங்கள் நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சி அடையும். நடப்பு நிதியாண்டில் ஒரு லட்சம் இளைஞர்களை கேம்பஸ் இன்டர்வியூ மூலம் தேர்வு செய்தோம். நடப்பு நிதியாண்டில் 40ஆயிரம் பேரை வேலைக்கு எடுக்க இருக்கிறோம்.

ரஷ்யா உக்ரைன் இடையிலான போர், ஐரோப்பாவில் நிலவும் சூழல் ஆகியவை நிறுவனத்தின் செயல்பாட்டை எந்த அளவிலும் பாதிக்காது. பாதிப்புகள் இருக்கும் நாடுகளில் எங்களின் கிளைகளும் இல்லை” எனத் தெரிவித்தார்


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios