வருமான வரி தாக்கல் பருவத்தில் மோசடி மின்னஞ்சல்கள் அதிகரித்துள்ளன. போலி லிங்குகளை கிளிக் செய்வதைத் தவிர்க்கவும், உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கவும்.
பரவிவரும் மோசடி செய்திகள்
தற்போது வருமான வரி தாக்கல் பருவம் நடைபெற்று வருகின்றது. மாத சம்பளம் பெறுபவர்கள், செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயம். இந்த பருவத்தை குறிவைத்து, மோசடி கும்பல்கள் செயல்பட ஆரம்பித்துள்ளன. இவர்கள் மின்னஞ்சல் மற்றும் செய்தி மூலம் போலியான தகவல்களை அனுப்பி, வரி செலுத்துவோரை ஏமாற்றுகிறார்கள்.
லிங்கை தொட்டால் பணம் மாயமாகும்
PIB Fact Check நிறுவனம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள எச்சரிக்கையின் படி, தற்போதைய மோசடி வழிகள் மிகவும் நுட்பமானவையாக உள்ளதாகவும் தங்கள் பணம் திரும்ப பெறப்படும், உங்கள் KYC தகவல் தேவை போன்ற தலைப்புகளுடன், அரசு நிறுவனங்களைப் போல தோன்றும் மின்னஞ்சல்களை பரவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கொடுக்கப்படும் லிங்குகளை கிளிக் செய்தாலே, உங்கள் தனிப்பட்ட வங்கி விவரங்கள் மற்றும் பாஸ்வேர்டுகள் அவர்களிடம் போய்விடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
லிங்கை நம்பாதே உன்னை ஏமாற்றும்!
இந்த போலி மின்னஞ்சல்களில், வருமான வரித்துறையினால் அனுப்பியதாக கூறப்படும் பெயரில், ரூ.50,000 வரையான தொகையை மீளப்பெற வாய்ப்பு எனக் கூறப்படுகிறது. ஆனால் உண்மையில், வருமான வரித் துறை இப்படியொரு மின்னஞ்சல் அனுப்புவதில்லை. எந்தச் செய்தியும், e-filing portal அல்லது https://incometax.gov.in மூலமாக மட்டுமே வரும். இது தொடர்பாக சந்தேகமுள்ள மின்னஞ்சல் வந்தால், அதைத் திறக்காமல், உடனடியாக https://incometaxindia.gov.in/pages/report-phishing.aspx என்ற இணையதளத்தில் புகாரளிக்க வேண்டும்.
இந்த வகை மோசடிகளை அரசு, வங்கி மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன. ஆனால், ஒவ்வொருவரும் தங்களது தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதே மிகவும் அவசியமாகும். முக்கியமாக, எந்தவொரு மின்னஞ்சலும் உங்கள் பாஸ்வேர்டுகள், OTP, வங்கி விவரங்கள் போன்றவற்றை கேட்கவில்லை என்றால் அது ஏமாற்று மின்னஞ்சலாக இருக்க வாய்ப்பு அதிகம்.
