டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் சஃபாரி ஸ்பெஷல் எடிஷன் மாடலை புதிய நிறத்தில் அறிமுகம் செய்து இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது சஃபாரி எஸ்.யு.வி. மாடலின் ஸ்பெஷல் எடிஷன் மாடலின் புதிய நிற வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. அந்த வகையில் ஸ்பெஷல் எடிஷன் சஃபாரி அட்வென்ச்சர் பெர்சோனா எடிஷன் மாடல் தற்போது ஆர்கஸ் வைட் (Orcus White) எனும் புதிய நிறத்தில் கிடைக்கிறது.
டாடா சஃபாரி பெர்சோனா அட்வென்ச்சர் பெர்சோனா எடிஷன் டாப் எண்ட் XZ+ வேரியண்டை சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் இந்த மாடல் விலை ரூ. 20.20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த எஸ்.யு.வி. மாடல் ஸ்டாண்டர்டு வேரியண்டை விட வித்தியாசமான வெளிப்புற நிறம், பிளாக்டு-அவுட் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன.

டாடா சஃபாரி அட்வென்ச்சர் பெர்சோனா எஸ்.யு.வி.ய மாடல் இதுவரை டிராபிக்கல் மிஸ்ட் நிறத்தில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அந்த வகையில் இந்த மாடல் இனி ஆர்கஸ் வைட் நிறத்திலும் கிடைக்கும். புதிய நிறம் கொண்ட வேரியண்டிலும் முன்புறம் மற்றும் பின்புறம் வெண்டிலேடெட் சீட்கள், வயர்லெஸ் சார்ஜர், ஏர் பியூரிஃபையர் மற்றும் இதர அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய சஃபாரி அட்வென்ச்சர் பெர்சோனா எஸ்.யு.வி. மாடல் விலையை டாடா மோட்டார்ஸ் இதுவரை அறிவிக்கவில்லை. இந்திய சந்தையில் சஃபாரி எஸ்.யு.வி. மாடலின் அட்வென்ச்சர் எடிஷன் விலை ரூ. 24.2 லட்சம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 25.79 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
டாடா சஃபாரி அட்வென்ச்சர் பெர்சோனா ஆர்கஸ் வைட் நிற மாடலிலும் பிளாக்டு-அவுட் அலாய் வீல்கள், முன்புறம் கருப்பு நிற கிரில், ரூஃப் ரெயில் இன்சர்ட்கள், அவுட்டர் டோர் ஹேண்டில்கள், ஹெட்லேம்ப் இன்சர்ட்கள் மற்றும் பம்ப்பர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் பொனெட்டில் சஃபாரி மஸ்கோட் ஒன்றும் இடம்பெற்று இருக்கிறது.
இந்த மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 170 பி.எஸ். பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆப்ஷனல் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.
