Asianet News TamilAsianet News Tamil

எஸ்விபி வங்கி திவாலானது ஏன்? தப்பிய இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்; பிரதமருக்கு ராஜீவ் சந்திரசேகர் நன்றி!!

சிலிக்கான் வேலி வங்கி மீது அமெரிக்க அரசு உடனடியாக எடுத்த சில நடவடிக்கைகள் காரணமாக இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எதிர்கொண்டு இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வந்துள்ளன என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

SVB Crisis: Indian Startups trust Indian banking system more says minister Rajeev chandrasekhar
Author
First Published Mar 14, 2023, 11:42 AM IST

அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான சிலிக்கான் வேலி வங்கியில் கடந்த வாரம் மிகப்பெரிய அளவில் நிதி நெருக்கடி ஏற்பட்டு, வங்கி திவாலானது. வங்கியில் டெபாசிட் செய்திருந்த பணத்தை முதலீட்டாளர்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் திரும்ப எடுத்த காரணத்தால், வங்கி திவாலானது. அமெரிக்க பெடரல் வங்கி பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் வட்டி விகிதங்களை அதிகரித்து வந்த காரணத்தால், பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன.

இந்த நிலையில் இந்த வங்கியில் பணம் முதலீடு செய்திருந்த இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் நிலை என்னவாகும் என்ற அச்சம் ஏற்பட்டது. இந்த அச்சம் நேற்று முடிவுக்கு வந்தது. அமெரிக்க அரசு துரிதமாக செயல்பட்ட காரணத்தால், இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தப்பின. சிலிக்கான் வேலி வங்கியில் பணம் டெபாசிட் செய்து இருந்தவர்களுக்கு திங்கள்கிழமை ( அமெரிக்காவின் காலாண்டரின்படி இன்று) பணம் கிடைக்கும் என்று அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் அறிவித்து இருந்தது.

சிலிக்கான் வேலி வங்கி திவால்; ஒரே நேரத்தில் 42 பில்லியன் டாலர் பணம் திரும்பப் பெற்றதால் பதற்றம்!!

இதுகுறித்து டுவிட்டரில் கருத்து பதிவு செய்து இருக்கும் ராஜீவ் சந்திரசேகர், ''இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சிக்கலில் இருந்து தப்பின. இந்த சிக்கலில் இருந்து இந்திய வங்கி நிர்வாகத்தின் மீது இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஒரு புரிதலை ஏற்படுத்தியதுடன், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சிக்கலின்போது தொடர்ந்து கண்காணித்து வந்த பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் சீதாராமன், ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா ஆகியவற்றுக்கு நன்றி தெரிவிக்கிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க வங்கிகளில் 16வது பெரிய வங்கி சிலிக்கான் வேலி வங்கி. அமெரிக்க அரசின் பத்திரங்களை இந்த வங்கி வாங்கி இருந்தது. இந்த நிலையில் வங்கி வட்டி விகிதம் அதிகரித்த காரணத்தால், பத்திரத்தின் முக மதிப்பு குறைந்தது. இந்த வங்கியில்தான் ஸ்டார்ட் அப்  நிறுவனங்கள் அதிகளவில் முதலீடு செய்து இருந்தன. இந்த நிலையில், முதலீட்டாளர்கள் பதற்றத்தில் தங்களது பணத்தை வங்கியில் இருந்து திரும்ப எடுக்கத் துவங்கினர். இதனால் வங்கி திவாலானது. 2008ஆம் ஆண்டுக்குப் பின்னர் திவாலான இரண்டாவது பெரிய வங்கியாகும் இது. 

இந்த நெருக்கடியை அடுத்து, பெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்பரேஷன் மற்றும் பெடரல் வங்கி இரண்டும் இணைந்து அதிபர் ஜோ பைடன் மற்றும் நிதியமைச்சர் ஜேனட் யெல்லன் ஆகியோருக்கு பரிந்துரைகளை வழங்கினர். இதையடுத்து, வங்கி முதலீட்டார்கள் அனைவரையும் பாதுகாப்பது என்று ஞாயிற்றுக் கிழமை முடிவு எடுக்கப்பட்டது. லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஹெச்எஸ்பிசி வங்கியும் பிரிட்டன் அரசின் பரிந்துரையின் பேரில் சிலிக்கான் வேலி வங்கியின் சிக்கலை முடிவுக்கு கொண்டு வர கை கொடுத்தது. 

இந்தியாவின் மீஷோ மற்றும்  ரேசர்பே ஆகிய இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் சிலிக்கான் வேலி வங்கியில் இருந்து பணத்தை எடுத்தன. 

Gold Rate Today: மீண்டும் ரூ.43 ஆயிரத்தை கடந்தது தங்கத்தின் விலை - அதிர்ச்சியில் பொதுமக்கள்

Follow Us:
Download App:
  • android
  • ios