செல்வமகள் திட்டம் உள்பட சிறுசேமிப்புத் திட்டங்களுக்கு வட்டி அறிவிப்பு! எவ்ளோ தெரியுமா?

ஜூலை - செப்டம்பர் காலாண்டில் சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் ஏதும் இல்லை என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

Sukanya Samriddhi Scheme: Govt keeps interest rates for small savings schemes unchanged for July-Sept quarter sgb

சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் காலாண்டுக்கு ஒரு முறை மாற்றப்படும். அந்த வகையில், ஜூலை - செப்டம்பர் காலாண்டுக்கான சிறு சேமிப்புத் திட்ட வட்டி விகிதங்களை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கடந்த டிசம்பரில் முடிந்த காலாண்டுக்குப்பின் சிறுசேமிப்புத் திட்டங்களுக்கு வட்டி விகிதம் மாற்றப்படாத நிலையில், செப்டம்பரில் முடியும் காலாண்டுக்கும் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

அதிகபட்சமாக பெண் குழந்தைகளுக்கான சிறப்புத் திட்டமான சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டத்துக்கு 8.2% வட்டி வழங்கப்படுகிறது. தேசிய சேமிப்பு சான்றிதழ் முதலீட்டுக்கு 7.7%, கிசான் விகாஸ் பத்திரத்துக்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது.

ஜூலை மாதம் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை! வங்கிக்கு போக முன்கூட்டியே பிளான் பண்ணுங்க!

Sukanya Samriddhi Scheme: Govt keeps interest rates for small savings schemes unchanged for July-Sept quarter sgb

1 ஆண்டு டைம் டெபாசிட்டுக்கு 6.9% வழங்கப்படும். இதுவே 2 ஆண்டுக்கு 7% ஆகவும், 3 ஆண்டுக்கு 7.1% ஆகவும் இருக்கும். 5 ஆண்டு டைம் டெபாசிட் செய்தால் 7.5%, 5 ஆண்டு ரெகரிங் டெபாசிட் என்றால் 6.7% வட்டி கிடைக்கும்.

மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்துகு 8.2%, மாத வருமானக் கணக்குக்கு 7.4%, பி.பி.எஃப் கணக்குக்கு 7.1% வட்டி கொடுக்கப்படும். வழக்கமான சேமிப்புத் திட்டக் கணக்கில் 4% வட்டி தொடர்ந்து கிடைக்கும்.

படிச்சது 10வது தான்... டம்மி ஐ.டி. கம்பெனியை தொடங்கி லட்ச லட்சமாக அபேஸ் செய்த ஆசாமிகள்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios