Stock Market Today: பங்குச்சந்தை உயர்வு | சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் ஏற்றம்: உலோகம், வங்கி பங்குகள் லாபம்

இந்தியப் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் இன்று வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 350 புள்ளிகள் உயர்ந்துள்ளது, நிப்டியும் ஏற்றம் கண்டுள்ளது.

Stock Market today: Sensex gains 350 points, while Nifty crosses 17,400

இந்தியப் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் இன்று வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 350 புள்ளிகள் உயர்ந்துள்ளது, நிப்டியும் ஏற்றம் கண்டுள்ளது.

கடந்த வாரம் முழுவதும் இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவுடன் காணப்பட்ட நிலையில் இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை நடத்துவது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் பணவீக்கம் குறையவில்லை. அதைக் குறைக்கும் நோக்கில் பெடரல் ரிசர்வ் வட்டியை உயர்த்தும் என்ற அச்சம் முதலீட்டாளர்களை விட்டு அகவில்லை. மார்ச் மாதத்தில் பெடரல் ரிசர்வ் என்ன மாதிரியான முடிவை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் முதலீட்டாளர்கள் உள்ளனர்.

Stock Market today: Sensex gains 350 points, while Nifty crosses 17,400

மீளாத பங்குச்சந்தை | 7வது நாளாக சென்சென்ஸ், நிப்டி வீழ்ச்சி: அதானி பங்குகள் சரிவு

அதேசமயம், சீனாவில் தொழிற்துறை உற்பத்தி வேகமெடுத்திருப்பது முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. சீனாவின் தொழிற்துறை வேகமெடுத்திருப்பதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கியுள்ளது.  இது சந்தையில் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இன்று காலை வர்த்தகம் தொடங்கியவுடன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 366 புள்ளிகள் ஏற்றத்துடன், 59,328 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி  105 புள்ளிகள் உயர்வுடன் 17,409 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நடத்துகிறது. 

நிப்டியில் அதானி என்டர்பிரைசர்ஸ், ஹின்டால்கோ, அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல், மகிந்திரா அன்ட் மகிந்திரா பங்குகள் லாபத்துடன் நகர்கின்றன. அப்பலோ மருத்துவமனை, பிரி்ட்டானியா, ஹெச்டிஎப்சி லைப், டாடா நுகர்வோர், எஸ்பிஐ காப்பீடு பங்குகள் சரிவில் உள்ளன

Stock Market today: Sensex gains 350 points, while Nifty crosses 17,400

என்எஸ்இ பட்டியலில் அதானி நிறுவனங்கள்| பதறும் முதலீட்டாளர்கள்! SEBI தலையிட கோரிக்கை

மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 நிறுவனங்களின் பங்குகளில், பவர்கிரிட் நிறுவனப் பங்கைத் தவிர மற்ற 29 நிறுவனங்களின் பங்குகளும் லாபத்தில் நகர்கின்றன. மகிந்திரா அன்ட் மகிந்திரா, டாடாஸ்டீல், டிசிஎஸ், எச்சிஎல் டெக், லார்சன் அன்ட் டூப்ரோ முன்னணியில் உள்ளன.

நிப்டி துறைகளில் ஊடகத்துறையைத் தவிர அனைத்து துறைப் பங்குகளும் லாபத்தோடு நகர்கின்றன. உலோகத்துறை அதிபட்சமாக 2.44 சதவீதத்துடனும், ஐடி 0.76%, பொதுத்துறை வங்கி 0.61% லாபத்துடனும் நகர்கின்றன

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios