சந்தை நிபுணர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் இன்றைய சந்தையில் லாபம் தரும் சில பங்குகளை இங்கே காணலாம். இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ வங்கி, சிஇஎஸ்சி போன்ற பங்குகளுக்கான வாங்கும் விலை, இலக்கு விலை மற்றும் ஸ்டாப் லாஸ் விலைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
நிதானமும், சர்வதேச பொருளாதார சூழ்நிலையை கணிக்கும் மனநிலையும் இருந்தால் பங்கச்சந்தையில் கைநிறைய காசு பார்க்கலாம் என்கின்றனர் சந்தை நிபுணர்கள். சந்தையின் போக்கு மற்றும் உலக நாடுகளில் நிலவும் அரசியல் பொருளாதார காரணிகளை கொண்டு இன்றைய சந்தையில் சில பங்குகள் முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அள்ளிக்கொடுக்கும் என அறிவுறுத்தியுள்ளனர் நிதி ஆலோசகர்கள்.
இன்ஃபோசிஸ்
இன்போசிஸ் நிறுவன பங்குகளை ரூ.1568 ரூபாய்க்கு வாங்கலாம் என்றும், சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ரூ.1660 வரை உச்சம் அடையும். ஸ்டாப் லாஸ் ரூ.1515. இன்ஃபோசிஸ் லிமிடெட் (Infosys Limited) என்பது வணிக ஆலோசனை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் புறமூலாக்கமச் சேவைகளை வழங்கும் ஓர் இந்தியப் பன்னாட்டுத் தொழில்நுட்ப நிறுவனமாகும். பெங்களூருவில் தலைமையகமாகவும், உலகெங்கும் 56 நாட்டுகளில் 94 வணிக அலுவலகங்கள் மற்றும் 139 டெவலப்மெண்ட் மையங்களுடன் செயல்படுகிறது.
Infosys Ltd (INFY):
வாங்கும் விலை: ₹1568
இலக்கு விலை: ₹1660
ஸ்டாப் லாஸ்: ₹1515
தற்போதைய விலை ₹1586.
சரிவுக்கு பின் நிலைத்த நிலையில் உள்ளது.
ICICI வங்கி
ஐசிஐசிஐ வங்கு பங்குகளை ரூ.1460 ரூபாய்க்கு வாங்கலாம். அதிகபட்சமாக ரூ.1575க்கு செல்லும் எனவும் ரூ.1400க்கு ஸ்டாப் லாஸ் போட வேண்டும் எனவும் சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். 1955 ஜனவரி 5 அன்று “Industrial Credit and Investment Corporation of India (ICICI)” எனத் துவங்கப்பட்டது. 1994–ல் ICICI Bank ஆக மாற்றப்பட்டது. இந்தியாவில் ~6,613 கிளைகளும் 16,120 ATMகளும்; மேலும் 11 நாடுகளில் சேவைகள் உள்ளன. வங்கி சேவைகளில் கலக்கி வரும் இந்த நிறுவனம் முதலீட்டாளர்களின் நம்பிக்கை பெற்றுள்ளது.
ICICI Bank Ltd (ICICIBANK):
வாங்கும் விலை: ₹1460
இலக்கு விலை: ₹1575
ஸ்டாப் லாஸ்: ₹1400
lifetime high பகுதியில் நிலைத்திருக்கிறது
கொல்கத்தா எலக்ட்ரிக் சப்ளை கார்ப்பரேஷன்
CESC பங்குகளை ரூ.168 ரூபாய்க்கு வாங்கலாம். அதிகபட்சமாக ரூ.183க்கு செல்லும் எனவும் ரூ.160க்கு ஸ்டாப் லாஸ் போட வேண்டும் எனவும் சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.CESC Ltd (Calcutta Electric Supply Corporation Limited) நிறுவனம் இந்தியாவின் முதல் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட மின்சாரம் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனமாகும். CESC என்பது கொல்கத்தா எலக்ட்ரிக் சப்ளை கார்ப்பரேஷன் (Calcutta Electric Supply Corporation) என்ற முழுமையான மின்சாரம் வழங்கும் நிறுவனமாகும், இது கொல்கத்தா மற்றும் ஹவுரா பகுதிகளில் மின்சாரத்தை உற்பத்தி செய்து விநியோகம் செய்கிறது. இது RP-சஞ்சீவ் கோயங்கா குழுமத்தின் ஒரு அங்கமாகும். CESC ஆனது மின்சார விநியோகத்தில் முன்னணியில் உள்ளது, 1899 முதல் செயல்பட்டு வருகிறது
CESC Ltd:
வாங்கும் விலை: ₹168
இலக்கு விலை: ₹183
ஸ்டாப் லாஸ்: ₹160
Bajaj FinServ
பஜாஜ் பின்சர்வ் பங்குகளை ரூ.1992 ரூபாய்க்கு வாங்கலாம். அதிகபட்சமாக ரூ.2100 க்கு செல்லும் எனவும் ரூ.1950க்கு ஸ்டாப் லாஸ் போட வேண்டும் எனவும் சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். பஜாஜ் பின்சர்வ் (Bajaj Finserv) என்பது ஒரு மிகப்பெரிய இந்திய நிதி சேவைகளை வழங்கும் நிறுவனம். இது பஜாஜ் ஆட்டோ ஃபைனான்ஸ் லிமிடெட் என்ற பெயரில் துவங்கி, பின்னர் பல்வேறு நிதி சேவைகளை வழங்கும் நிறுவனமாக வளர்ந்துள்ளது.பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனம் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு நிதி சேவைகளை வழங்குகிறது.
Bajaj Finserv Ltd (BAJAJFINSV):
வாங்கும் விலை: ₹1992
இலக்கு விலை: ₹2100
ஸ்டாப் லாஸ்: ₹1950
பெல் நிறுவனம்
பெல் நிறுவன பங்குகளை ரூ.255 ரூபாய்க்கு வாங்கலாம். அதிகபட்சமாக ரூ.267 க்கு செல்லும் எனவும் ரூ.250க்கு ஸ்டாப் லாஸ் போட வேண்டும் எனவும் சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) என்பது இந்தியாவில் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும், இது "மகாரத்னா" அந்தஸ்துடன் உள்ளது. இது மின்சாரம், போக்குவரத்து, எண்ணெய் மற்றும் எரிவாயு, மற்றும் பிற தொடர்புடைய தொழில்கள் உட்பட பல்வேறு துறைகளுக்கு மின்சாரம், மின்னணு மற்றும் இயந்திர உபகரணங்களை உற்பத்தி செய்கிறது
Bharat Heavy Electricals Ltd (BHEL):
வாங்கும் விலை: ₹255
இலக்கு விலை: ₹267
ஸ்டாப் லாஸ்: ₹250
Poonawalla Fincorp
Poonawalla Fincorp நிறுவன பங்குகளை ரூ.421 ரூபாய்க்கு வாங்கலாம். அதிகபட்சமாக ரூ.445 க்கு செல்லும் எனவும் ரூ.410க்கு ஸ்டாப் லாஸ் போட வேண்டும் எனவும் சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். பூனவல்லா ஃபின்கார்ப், சைரஸ் பூனவல்லா குழுமத்தால் ஆதரிக்கப்படும் வங்கி அல்லாத நிதி நிறுவனம் (NBFC) ஆகும், இது நுகர்வோர் கடன், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன (MSME) கடன், மற்றும் வணிகக் கடன் போன்ற பல நிதி சேவைகளை வழங்குகிறது
Poonawalla Fincorp Ltd:
வாங்கும் விலை: ₹421
இலக்கு விலை: ₹445
ஸ்டாப் லாஸ்: ₹410
Fino Payments Bank
Fino Payments Bank நிறுவன பங்குகளை ரூ.266 ரூபாய்க்கு வாங்கலாம். அதிகபட்சமாக ரூ.282 க்கு செல்லும் எனவும் ரூ.260க்கு ஸ்டாப் லாஸ் போட வேண்டும் எனவும் சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.ஃபினோ பேமெண்ட்ஸ் வங்கி என்பது ஒரு பெரிய பணம் செலுத்தும் வங்கியும், ஒரு டிஜிட்டல் வங்கி பங்குதாரருமாகும். இது இந்தியா முழுவதும் 90% மாவட்டங்களில் 724671 வங்கிக் கிளைகள், 54 வங்கிக் கிளைகள் மற்றும் 130 வாடிக்கையாளர் சேவைப் புள்ளிகளுடன் செயல்படுகிறது
Fino Payments Bank Ltd:
வாங்கும் விலை: ₹266
இலக்கு விலை: ₹282
ஸ்டாப் லாஸ்: ₹260
Bajaj Housing Finance
Bajaj Housing Finance பங்குகளை ரூ.125.66 ரூபாய்க்கு வாங்கலாம். அதிகபட்சமாக ரூ.135 க்கு செல்லும் எனவும் ரூ.122 க்கு ஸ்டாப் லாஸ் போட வேண்டும் எனவும் சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (Bajaj Housing Finance Limited, BHFL) என்பது ஒரு வீட்டு நிதி நிறுவனமாகும். இது புனேவில் தலைமையிடமாகக் கொண்டுள்ளது. BHFL தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வீடுகள் வாங்குதல் மற்றும் புதுப்பித்தல், வணிக இடங்களுக்கு நிதி வழங்குதல் போன்ற சேவைகளை வழங்குகிறது
Bajaj Housing Finance Ltd:
வாங்கும் விலை: ₹125.66
இலக்கு விலை: ₹135
ஸ்டாப் லாஸ்: ₹122
