ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் பங்குகளை மாற்றுவதில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக கலாநிதி மாறன், KAL ஏர்வேஸ் தொடர்ந்த வழக்கில், ரூ.600 கோடி ரொக்கமாகத் தருவதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது
ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் பங்குகளை மாற்றுவதில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக கலாநிதி மாறன், KAL ஏர்வேஸ் தொடர்ந்த வழக்கில், ரூ.600 கோடி ரொக்கமாகத் தருவதாக ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது.
இருதரப்பினரும் பிரச்சினையை விரைவாக முடித்துக்கொண்டு பங்குகளை கைமாற்ற முன்வர வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும் கேட்டுக்கொண்டது.
2015ஆம் ஆண்டில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் இருந்து கலாநிதி மாறன் முழுமையாக வெளியேறி சிறு அளவிலான பங்குகளை மட்டுமே வைத்துக்கொண்டு மொத்த உரிமத்தையும் அதன் ஆஸ்தான நுறுவனரான அஜய் சிங் பெற்றார்.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்குகளை மாற்றிய வகையில் அதன் முன்னாள் தலைவர் கலாநிதிமாறனுக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ரூ.579 கோடியை அளிக்க வேண்டியுள்ளது.
இதில் தனக்கான பங்கு உரிமத்தை முறையாக செலுத்தாத காரணத்திற்காக கலாநிதி மாறன் மற்றும் கேஏல் ஏர்லையன்ஸ் நிறுவனம் வழக்கு தொடுத்தது. தற்போது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் முழுவதும் அஜய் சிங் கட்டுப்பாட்டில் இருக்கிறது .ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் பங்குகளை 2015-ம் ஆண்டு அஜய் சிங்கிற்கு கலாநிதி மாறன் வெறும் 2 ரூபாய்க்கு ஒரு பங்கு என விற்றுள்ளார்.
2015-ம் ஆண்டில் பங்கு களை மாற்றும்போது செய்து கொண்ட ஒப்பந்தத் தின்படி இந்த தொகையை வழங்காததால் மாறன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கு ஒரு நடுவர் மன்றத்தை அமைத்தது.

உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகள் அர்ஜித் பசாயத், ஹேமந்த் லட்சுமண் கோகலே, கேஎஸ்பி ராதாகிருஷ்ண் ஆகியோர் அடங்கிய தீர்ப்பாயம், கலாநிதி மாறன், கல் ஏர்வேஸ் குற்றச்சாட்டை நிராகரித்தது. கலாநிதி மாறன் தரப்பு கொடுத்த 308 கோடி ரூபாய் பணத்தை 12 சதவிகித வட்டியுடன் 30 மாதங்களுக்குள் ஸ்பைஸ் ஜெட் கொடுக்க வேண்டும் என தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து கலாநிதி மாறன், கல் ஏர்வேஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ஸ்பைஸ் ஜெட் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகல் ரோஹத்கி ஆஜராகினார். உச்ச நீதிமன்றத்தில் முகல் ரோஹத்கி அளித்த வாக்குறுதியில் “ பங்குபரிமாற்ற வழக்கில் அனைத்து விவகாரங்களையும் முடித்துக்கொள்ள கலாதிநிதி மாறன், கல்ஏர்வேஸுக்கு ரூ.600 கோடி ரொக்கமாக அளிக்க ஸ்பைஸ் ஏர்வேஸ் தயாராக இருக்கிறது.

ஒட்டுமொத்த தொகையான ரூ.578 கோடியில் ஏற்கெனவே ரூ.308 கோடி ரொக்கமாக செலுத்திவிட்டோம், ரூ.270 கோடி வங்கி உறுதித்தொகையாக செபாசிட் செலுத்தியிருக்கிறோம். இதில் கூடுதலாக ரூ.22 கோடி தருகிறோம். ஒட்டுமொத்தமாக ரூ.600 கோடி தருகிறோம், இந்த வழக்கை இருதரப்பும் பிரச்சினையின்றி முடித்துக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்
இந்த வாதத்தைக் கேட்ட உச்ச நீதிமன்றம் இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி, பங்கு பகிர்மான விவகாரத்தை சுமூகமாக முடிக்க வேண்டும் என அறிவுரை கூறி வரும் 14ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது
