கார் தயாரிப்பாளர்கள் இனிமேல் அனைத்து இருக்கைகளிலும் 3பாயின்ட் சீட் பெல்ட் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிலும் பின் இருக்கையில் நடுப்பகுதியில் அமர்ந்திருப்பவருக்கு ஏற்றார்போல் விமானத்தில் இருப்பதுபோன்று சீட் பெல்ட் உருவாக்க வேண்டும் என்று மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகம் புதியவிதியை கொண்டுவர இருக்கிறது

கார் தயாரிப்பாளர்கள் இனிமேல் அனைத்து இருக்கைகளிலும் 3 பாயின்ட் சீட் பெல்ட் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிலும் பின் இருக்கையில் நடுப்பகுதியில் அமர்ந்திருப்பவருக்கு ஏற்றார்போல் விமானத்தில் இருப்பதுபோன்று சீட் பெல்ட் உருவாக்க வேண்டும் என்று மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகம் புதிய விதியை கொண்டுவர இருக்கிறது

தற்போது காரில் பயணிப்பவர்களில் ஓட்டுநர், ஓட்டுநர் அருகே அமர்ந்திருப்பவர், பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்களில் இருவர் மட்டுமே சீட் பெல் அணிய முடிகிறது. பின் இருக்கையில் நடுப்பகுதியில் அமர்ந்திருப்பவருக்கு சீட் பெல்ட் இல்லை. இனிமல், பின் இருக்கையில் நடுவில் அமர்ந்திருப்பவருக்கும் சீட் பெல்ட் கட்டாயமாக்கப்படுகிறது. 

தற்போது பெரும்பாலான கார்களில் 2 பாயின்ட் சீட் பெல்ட்அல்லது லேப் சீட்பெல்ட் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இனிமேல், Yவடிவ சீட்பெல்ட்தான் அனைத்து சீட்களிலும் பொருத்த வேண்டும் அதாவது, விமானத்தில் இருப்பது போன்ற சீட் பெல்ட்டை உருவாக்குவது கட்டாயமாக்கப்படுகிறது.இதற்கான வரைவு அறிக்கை விரைவில் மக்களின் கருத்துக் கேட்புக்காக மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட இருக்கிறது.

இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் “ மத்திய அரசின் நோக்கம் என்பது இந்தியாவில் தயாரிக்கப்படும் கார் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும், பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும், அதை மேம்படுத்த வேண்டும் என்று நினைக்கிறது. பல நிறுவனங்கள் தயாரிக்கும் கார்களிலும் 3 பாயின்ட் சீட் பெல்ட் என்பதே இல்லை, 2 பாயின்ட் சீட் பெல்ட்தான் இருக்கிறது அதிலும் பின் இருக்கையில் நடுவில் அமர்ந்திருப்பவருக்கு சீட் பெல்ட் கிடையாது. 

இதனால் விபத்து ஏற்படும்போது, 2 பாயின்ட் சீட் பெல்ட் அணிந்தவர்கள் அதிகமான சேதங்களையும், உயிரிழப்புகளையும் சந்திக்கலாம். இதைத் தவிர்க்கவே 3 பாயின்ட் அல்லது Yவடிவ சீட் பெல்ட் பெல்ட்டை அறிமுகம் செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

3 பாயின்ட் சீட் பெல்ட், 2பாயின்ட் சீட் பெல்ட்டைவிட பாதுகாப்பானது என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 3 பாயின்ட் சீட் பெல்ட் அணியும் போது, உடலை முழுமையாக அசையாமல் பெல்ட் பிடித்துவிடும், தோள்பட்டையையும் இருக்கிவிடும். இதனால் விபத்து ஏற்படும்போது, எதிர் வாகனத்தில் மோதினாலும் காயம் அதிகமாக ஏற்படுவது தவிர்க்கப்படும்.

கடந்த 1959ம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே வோல்வோ நிறுவனம் தனது வாகனங்களுக்கு 3பாயின்ட் சீட் பெல்டை அறிமுகம் செய்து அதற்கு காப்புரிமையும் வாங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.

கார்களின் பாதுகாப்பு விஷயத்தில் 2-வது முறையாக முக்கியமுடிவை அரசு எடுக்கிறது. இதற்கு முன், கார்களில் கண்டிப்பாக 6ஏர் பேக்குகளை வைத்திருப்பது கட்டாயம் எனத் தெரிவித்திருந்தது. விபத்துளில் இந்திய கார்கள் குறித்த ஆய்வில் சராசரிக்கும் குறைவாகவே இந்திய கார்கள் ரேட்டிங் இருந்ததால், 6 ஏர் பேக்குகள் கட்டாயமாக்குவது குறித்து வரைவு மசோதாவைவெளியிட்டு, மக்கள் கருத்தைக் கேட்டுள்ளது 
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்