Fortis Healthcare: டாய்ச்சி-போர்டிஸ் வழக்கு: மல்விந்தர் சிங், ஷிவிந்தர் சிங் சகோதரர்களுக்கு 6 மாதம் சிறை
ஜப்பானின் டாய்ச்சி நிறுவனம், போர்டிஸ் ஒப்பந்தம் தொடர்பான மோசடி வழக்கில் ரேன்பாக்ஸி முன்னாள் தலைவர்கள் மல்விந்தர் சிங் , ஷிவிந்தர் சிங் சகோதரர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
ஜப்பானின் டாய்ச்சி நிறுவனம், போர்டிஸ் ஒப்பந்தம் தொடர்பான மோசடி வழக்கில் ரேன்பாக்ஸி முன்னாள் தலைவர்கள் மல்விந்தர் சிங் , ஷிவிந்தர் சிங் சகோதரர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
ரான்பாக்ஸி மருந்து நிறுவனத்தின் புரோமோட்டர்களாக மல்விந்தர் சிங், ஷிவிந்தர் சிங் இருந்த போது, பெரும்பாலான பங்குகளை ஜப்பானைச் சேர்ந்த டாய்ச்சி சான்கியோ நிறுவனத்துக்கு கடந்த 2008ம் ஆண்டு விற்பனை செய்தனர்.
அதானி தூங்கி எழுந்தால் ரூ.1,600 கோடி!12 இந்தியர்களிடம் ஒரு லட்சம் கோடிக்கும் மேல் சொத்து
ஆனால், ஏராளமான தகவல்களை மறைத்தும், போலியான நிறுவனங்களில் முதலீடு செய்தும், சிங் சகோதர்ரகள் முறைகேடு செய்தனர்.
இதையடுத்து, கடந்த 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் டாய்ச்சி நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், மல்விந்தர் சிங், ஷிவிந்தர் சிங் இருவரும் பணத்தை தராமல் போலி நிறுவனங்களுக்கு திருப்பி மோசடி செய்ததாக வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மல்விந்தர் சிங், ஷிவிந்தர் சிங் ஆகியோருக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து இன்று தீர்ப்பு அளித்தது.
கார்களில் பின் இருக்கை சீட்பெல்ட் அலாரம் கட்டாயம்: மத்திய அரசு புதிய விதி
இது தவிர மல்விந்தர் சிங், ஷிவிந்தர் சிங் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருவரும் 2018ம் ஆண்டு வரை போர்டிஸ் மருத்துவமனையின் புரமோட்டர்களாக இருந்தனர்.
அப்போது, 2017ம் ஆண்டில் போர்டிஸ் மருத்துவமனையிலிருந்து ரூ.403 கோடியை கைமாற்றியதாக புகார் எழுந்தது. இதை விசாரித்த பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபி, 90 நாட்களில் வட்டியுடன் பணத்தை திருப்பிச் செலுத்த சிங் சகோதரர்களுக்கு உத்தரவிட்டது.
மருத்துவமனையிலிருந்து ரூ.403 கோடியை எடுத்து பல்வேறு பணிகளுக்கும் திருப்பிவிட்டனர்.இதில் ஆர்ஹெச்சி ஹோல்டிங் எனப்படும் போர்டிஸ்-ரெலிகேர் குழுமத்தின் தலைமை நிறுவனம் அதிகமாக பயன் அடைந்தது.
செலவு குறைப்பாம்! 80 பைலட்களை 3 மாத விடுப்பில் வீட்டுக்கு அனுப்பிய ஸ்பைஸ் ஜெட் நிறுவனம்
ரெலிகேர் என்டர்பிரைசஸ் மற்றும் ரெலிகேர் பின்வெஸ்ட் நிறுவனத்துக்காக ரூ.2,315 கோடியை சிங் சகோதரர்கள் கடன் பெற்றனர். 2019ம் ஆண்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், கடன் தொகை அனைத்தையும் திருப்பிச் செலுத்த வேண்டும், அதுவரை போர்டிஸ் மருத்துவமனையின் சொத்துக்களை விற்க்கக்கூடாது என உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது