EPFO: மத்திய அரசு பிஎஃப் பகுதியளவு பணம் எடுக்கும் விதிகளை எளிமையாக்கியுள்ளது. இனி மிக விரைவில் பணம் கைக்கு கிடைக்கும். இது குறித்த முழுமையான தகவல்இந்த செய்தியில் பார்க்கலாம்.
கோடிக்கணக்கான ஊழியர்கள் மற்றும் இபிஎஃப்ஓ (EPFO) சந்தாதாரர்களுக்கு மத்திய அரசு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், 'ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டம், 2026'-ன் கீழ், பிஎஃப் கணக்கிலிருந்து பகுதியளவு பணத்தை (PF Partial Withdrawal) எடுக்கும் விதிகளை மிகவும் எளிமையாகவும் வெளிப்படையாகவும் மாற்றியுள்ளது. இதற்கு முன்பு இருந்த சிக்கலான விதிகள் மற்றும் பல படிவங்களின் (Forms) குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள இபிஎஃப்ஓ, முன்பணம் கோருவதை மூன்று முக்கிய பிரிவுகளாக (Categories) பிரித்துள்ளது.
1. முன்பணம் பெறுவதற்கான 3 புதிய பிரிவுகள்
பிரிவு 1: உடல்நலக்குறைவு, கல்வி மற்றும் திருமணம்
உடல்நல சிகிச்சை; உறுப்பினர்கள் தங்களின் அல்லது தங்கள் குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ அவசரத்திற்காக எந்தவொரு குறிப்பிட்ட வரம்பும் இல்லாமல் எத்தனை முறை வேண்டுமானாலும் முன்பணம் பெறலாம்.
கல்வி; இபிஎஃப் உறுப்பினர் காலத்தின் முழுவதிலும், குழந்தைகளின் அல்லது சொந்த உயர்கல்விக்காக அதிகபட்சம் 10 முறை பணம் பெற வாய்ப்புள்ளது.
திருமணம்; உறுப்பினர் காலத்தில் திருமணச் செலவுகளுக்காக அதிகபட்சம் 5 முறை முன்பணம் பெறலாம்.
பிரிவு 2; வீடு வாங்குதல், கட்டுதல் மற்றும் வீட்டுக் கடன்
வீடு அல்லது பிளாட் வாங்குதல், நிலம் வாங்குதல், புதிய வீடு கட்டுதல், வீட்டுக் கடன் திருப்பிச் செலுத்துதல் (Home Loan Repayment) மற்றும் வீட்டைப் புதுப்பித்தல் (Renovation) ஆகியவற்றிற்காக முழு உறுப்பினர் காலத்திலும் அதிகபட்சம் 5 முறை முன்பணம் பெறலாம்.
பிரிவு 3: சிறப்பு மற்றும் பிற சந்தர்ப்பங்கள்
வாரியத்தால் நிர்ணயிக்கப்பட்ட சிறப்பு அவசர அல்லது பிற தேவைகளுக்காக, உறுப்பினர்கள் ஒரு நிதியாண்டில் அதிகபட்சம் 2 முறை பகுதியளவு பிஎஃப் பணத்தை எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
2. தகுதி மற்றும் 75% புதிய முக்கிய விதிகள்
குறைந்தபட்சம் 12 மாத உறுப்பினர் தகுதி; எந்தப் பிரிவிலும் பகுதியளவு பிஎஃப் முன்பணம் பெற, ஊழியர் குறைந்தபட்சம் 12 மாதங்கள் (1 வருடம்) இபிஎஃப் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்.
75% வரை முன்பணம் பெறலாம்; இனிமேல், சந்தாதாரர்கள் தங்களின் மற்றும் நிறுவனத்தின் மொத்த பங்களிப்பில் அதிகபட்சம் 75% பணம் மற்றும் அதற்கான வட்டியை முன்பணமாகப் பெறலாம்.
Post Office: ரூ.50 முதலீட்டில் ரூ.35 லட்சம் ரிட்டர்ன்! போஸ்ட் ஆபீஸின் ஜாக்பாட் திட்டம்!
25% குறைந்தபட்ச இருப்பு கட்டாயம்
ஊழியரின் ஓய்வூதிய வாழ்க்கை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், கணக்கில் மொத்த பிஎஃப் இருப்பில் குறைந்தபட்சம் 25% பணத்தை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். இந்த எளிமைப்படுத்தப்பட்ட முறைக்கு அக்டோபர் 2025-ல் இபிஎஃப்ஓ-வின் மத்திய அறங்காவலர் குழு (CBT) ஒப்புதல் அளித்தது. அதன்பிறகு ஜூலை 2026 முதல் நாடு முழுவதும் இது சட்டப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது.
சட்ட மற்றும் நிதி நிபுணர்களின் கருத்து
பழைய குழப்பமான விதிகளால் லட்சக்கணக்கான பிஎஃப் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன (Reject). இந்த மூன்று தெளிவான வகைப்பாட்டால், கோரிக்கைகள் நிராகரிக்கப்படும் விகிதம் கணிசமாகக் குறையும், மேலும் அவசரத் தேவையுள்ள ஊழியர்களுக்கு விரைவில் பணம் கிடைக்கும்.


