share market today: Stock Market Today :தேசிய  மற்றும் மும்பைப் பங்குச்சந்தை கடந்தவாரம் ஆயிரம் புள்ளிகளுக்கும் மேல் சரிவுடன் முடிந்தநிலையில் இந்த வாரம் பங்குச்சந்தையை பாதிக்கும் காரணிகள் இருக்கின்றன. 

தேசிய மற்றும் மும்பைப் பங்குச்சந்தை கடந்தவாரம் ஆயிரம் புள்ளிகளுக்கும் மேல் சரிவுடன் முடிந்தநிலையில் இந்த வாரம் பங்குச்சந்தையை பாதிக்கும் காரணிகள் இருக்கின்றன. 

கடந்தவாரத்தின் இறுதி வர்த்தக நாளன வெள்ளிக்கிழமை மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1017 புள்ளிகள் சரிந்து 54,303 புள்ளிகளில் முடிந்தது. தேசியப்பங்குச்சந்தையில் நிப்டி 276 புள்ளிகள் குறைந்து, 16,202 புள்ளிகளில் நிலைகொண்டது. இந்த வாரம் இந்தியச் சந்தையைபாதிக்கும் 10 காரணிகள் உள்ளன. அவை குறித்து பார்க்கலாம்

அமெரிக்கச் சந்தை

அமெரிக்கப் பங்குச்சந்தையில் கடந்த ஜனவரிக்குப்பின் மிகப்பெரிய சரிவு கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்டது. மே மாதம் நுகர்வோர் பணவீக்கம் கடுமையாக உயர்ந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவித்தன. இதனால் பெடரல் பங்கு வட்டிவீதத்தை கடுமையாக உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கச்சந்தையில் மைக்ரோசாப்ட், அமேசான், ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகளும் சரிந்தன. அமெரிக் பெடரல் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தினால் இந்தியப்பங்குச்சந்தையிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேறுவது அதிகரிக்கும்.ஆதலால் அமெரிக்க சந்தை நிலவரம் முக்கியக் காரணியாகும்

ஆசியச்சந்தை

ஆசியச் சந்தையும் இன்று காலை சரிவுடன் தொடங்கியுள்ளது. சீனாவின் பொருளாதார புள்ளிவிவரங்கள் இன்று வெளியாவதால் அதை முதலீட்டாளர்கள் உற்று நோக்கி வருகின்றனர். ஜப்பானின் நிக்கி, தென் கொரியாவின் கோஸ்பி ஆகியவையும் சரிந்துள்ளன. ஆசியப்பங்குச்சந்தையும் இந்தியப்பங்குசந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்

எஸ்ஜிஎஸ் நிப்டி
சிங்கப்பூர் எஸ்ஜிஎஸ் நிப்டியும் 284 புள்ளிகள் சரிவுடன் முடிந்துள்ளது. சிங்கப்பூர் சந்தை நிலவரத்தையும் இந்திய முதலீ்ட்டாளர்கள் ஆர்வத்துடன் கவனித்து வருகிறார்கள்

தொழிற்துறை உற்பத்தி

ஏப்ரலில்தொழிற்துறை உற்பத்தி நிலவரம் 7.1 சதவீதம் உயர்ந்துள்ளது. மார்ச் மாதம் 2.2. சதவீதம்தான் இருந்தது. இந்த சாதகமான நிலவரமும் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்

கச்சா எண்ணெய் விலை

சீனாவில் கொரோனா பரவல் குறித்த எச்சரிக்கை காரணமாக கச்சாஎண்ணெய் விலை இன்று பேரலுக்கு 2 டாலர் குறைந்துள்ளது. ஆனால், விரைவில் சீனாவில் கச்சா எண்ணெய்க்கான தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதேசமயம், சர்வதேச பணவீக்க நிலவரம், பொருளாதார வளர்ச்சி ஆகியவையும் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்நிய முதலீட்டாளர்கள்

இந்தியச் சந்தையிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் ஜூன் மாதத்தில் இதுவரை ரூ.14 ஆயிரம் கோடி முதலீட்டைதிரும்பப் பெற்றுளளனர். தொடர்ந்து அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேற்றம் சந்தையை பலவீனப்படுத்துகிறது. 2022ம் ஆண்டில் இதுவரை ரூ.1.82 லட்சம் கோடி அந்நிய முதலீடு வெளியேறியுள்ளது. 

அமெரிக்க பெடரல் வங்கி

அமெரிக்காவில் நிலவும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பெடரல் வங்கி 75 புள்ளிகளை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பும்,சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும். 

செலாவணி கையிருப்பு குறைவு

கடந்த இருவாரங்களாக அதிகரித்த அந்நியச் செலாவணி கடந்த வாரத்தில் 30.60 கோடி டாலர் ரிசர்வ் வங்கியிடம் குறைந்துள்ளது. இந்த காரணியும் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும்

அந்நிய முதலீட்டாளர்கள்

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ஜூன் மாதத்தில் இதுவரை ரூ.3973 கோடிக்கு பங்குகளை விற்றுள்ளனர், உள்நாட்டு முதலீட்டாளர்கள் ரூ.2,831 கோடி பங்குகளை வாங்கியுள்ளனர். இரு தரப்பு புள்ளிவிவரங்களும் சந்தையில்தாக்கத்தை ஏற்படுத்தும்