share market today : தேசிய பங்குச்சந்தை, மும்பைப் பங்குச்சந்தை இன்று காலை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கி பிற்பகலுக்குப்பின் சரிவில் முடிந்தன. இரு நாட்களாக காளையின் ஆதிக்கம் இருந்தநிலையில் வர்த்தகத்தின் கடைசிநாளான இன்று பிற்பகுதியில் கரடியின் வசம் சென்றது

தேசிய பங்குச்சந்தை, மும்பைப் பங்குச்சந்தை இன்று காலை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கி பிற்பகலுக்குப்பின் சரிவில் முடிந்தன. இரு நாட்களாக காளையின் ஆதிக்கம் இருந்தநிலையில் வர்த்தகத்தின் கடைசிநாளான இன்று பிற்பகுதியில் கரடியின் வசம் சென்றது

காலையில் ஏற்றம்

சர்வதேச காரணிகள் சாதகமாக இருப்பது, அமெரிக்கப் பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிந்தது, கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பது, நிறுவனங்களின் 4-வது காலாண்டு முடிவுகள் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தின.

தொடர்ந்து 2-வது நாளாக மும்பை, தேசியப்பங்குசந்தையில் காளையின் ஆதிக்கம் ஏற்பட்டு, வர்தத்கம் காலை உற்சாகமாக நடந்தது. அமெரிக்கப் பங்குச்சந்தையான நாஷ்டாக்கில் கடந்த 6 மாதங்களில் இல்லாதஅளவு நேற்று ஏற்றத்துடன் முடிந்ததால் இந்தியப் பங்குச்சந்தைகளிலும் உயர்வு காணப்பட்டது

காலாண்டு முடிவுகள்

உள்நாட்டு நிறுவனங்களின் 4-வது காலாண்டு முடிவுகள் வெளிவந்தன. மாருதி சுஸூகி நிறுவனத்தின் 4-வது காலாண்டில் நிகர லாபம் 57 சதவீதம் அதிகரித்து, ரூ.1838 கோடியாக உயர்ந்தது. அல்ட்ராடெக் சிமெண்ட் நிகர லாபம் 47 சதவீதம் அதிகரித்து, ரூ.2,613 கோடியாக அதிகரித்தது. பங்குதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ஒருப ங்கிற்கு ரூ.38வழங்கவும் முடிவு எடுக்கப்பட்டது.

வீழ்ச்சி

பிற்பகல் வரை ஏற்றத்தில் சென்ற பங்குச்சந்தை, பிற்பகல் வர்த்தகத்தில் சரியத் தொடங்கியது. காலாண்டு முடிவுகள் வந்ததையடுத்து, முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றுலாபம் பார்ப்பதில் விறுவிறுப்பாக இறங்கியதால், சென்செக்ஸ்,நிப்டி வேகமாகச் சரிந்தது. 
இதனால் மும்பைப் பங்குச்சந்தையில் வர்த்தகம் முடிவில் சென்செக்ஸ் 460 புள்ளிகள் சரிந்து, 57,069 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்தது. தேசியப்பங்குச்சந்தையில் நிப்டி 142 புள்ளிகள் குறைந்து, 17,102 புள்ளிகளில் முடிந்தது. 1265 பங்குகள் மதிப்பு ஏற்றத்துடனும், 2035 பங்குகள் மதிப்பு சரிந்தும், 117 பங்குகள் மதிப்பு மாறாமலும் உள்ளன.

நிப்டியில் ஆக்சிஸ் வங்கி, கோல் இந்தியா, அதானி போர்ட்ஸ், பவர் கிரிட், பஜாஜ் ஆட்டோ ஆகிய பங்குகள் சரிவைச் சந்தித்தன. ஹெச்டிஎப்சி லைப், டாடா கன்சூமர், கோடக் மகிந்திரா, சன் பார்மா, ஹெச்டிஎப்சி வங்கிப் பங்குகள் லாபமடைந்தன. நிப்டியில் அனைத்து துறைகளும் சரிவில் முடிந்தன.

30 முக்கிய நிறுவனப்பங்குகளைக் கொண்ட மும்பைப் பங்குச்சந்தையில் 9 நிறுவனப் பங்குகள் மட்டுமே லாபத்தில் முடிந்தன. மற்ற நிறுவனப் பங்குகள் சரிந்தன. குறிப்பாக டாக்டர் ரெட்டீஸ், கோடக் வங்கி, சன் பார்மா, ஹெச்டிஎப்சி, ஹெட்சிஎப்சி வங்கி ஆகிய பங்குகள் 2 சதவீதம் லாபத்தில் முடிந்தன.

 இந்துஸ்தான் யூனிலீவர், ஐசிஐசிஐவங்கி, டாடா ஸ்டீல், பஜாஜ் பின்சர்வ், மகிந்திரா அன்ட் மகிந்திரா, நெஸ்ட்லே இந்தியா ஆகிய பங்குகளும் லாபமடைந்தன. ஆக்சிஸ் வங்கி பங்குகள் 5 சதவீதம் சரிந்தன. இது தவிர பவர்கிரிட், விப்ரோ, என்டிபிசி பங்குகளும் சரிந்தன