share market today :கடந்த 2 வர்த்தக தினங்களாக சரிவில் இருந்த  மும்பை மற்றும் தேசியப் பங்குசந்தை இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியுடனும், ஆர்வத்துடனும் பங்குகளை வாங்கி வருகிறார்கள்

கடந்த 2 வர்த்தக தினங்களாக சரிவில் இருந்த மும்பை மற்றும் தேசியப் பங்குசந்தை இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இதனால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியுடனும், ஆர்வத்துடனும் பங்குகளை வாங்கி வருகிறார்கள்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அமெரிக்க பங்குச்சந்தை

அமெரிக்க பெடரல் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தப்போவதாக வெளியிட்ட அறிவிப்பால் கடந்த 2 நாட்களாக பங்குச்சந்தையில் சரிவு காணப்பட்டது. ஆனால் அமெரிக்காவின் நாஷ்டாக்கில் நேற்று வர்த்தகம் ஏற்றத்துடன் முடிந்ததால், அந்த எதிரொலி ஆசியப்பங்குச்சந்தையிலும், இந்தியப் பங்குசந்தையிலும் காணப்பட்டது.

இதனால் நம்பிக்கையடைந்த முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் முதலீட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். ஹெச்டிஎப்சி லைப், பஜாஜ் பைனான்ஸ் ஆகிய இரு பெரிய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் சிறப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நம்பிக்கையால் முதலீட்டாளர்கள் பங்குகளை ஆர்வத்துடன் வாங்கி வருகிறார்கள்.

கவனம்

இருப்பினும் உக்ரைன்,ரஷ்யா இடையிலான போர் தீவிரமடைவதற்கான வாய்ப்பு, சீனாவில் அதிகரி்த்துவரும் கொரோனா பரவல், அதனால் பல மாநிலங்களில் லாக்டவுன் அறிவிப்பு ஆகியவற்றையும் எச்சரிக்கையுடன் முதலீட்டாளர்கள் கவனித்து வருகிறார்கள்.

ஏற்றம்

பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கும் முன்பே 500 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் இருந்தது. மும்பைப் பங்குச்சந்தை தொடங்கியதும் சென்செக்ஸ் 700 புள்ளிகள் அதிகரித்து, 57,288 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 210 புள்ளிகள் உயர்ந்து, 17,164 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.

உற்சாகம்

30 முக்கிய நிறுவனங்களைக் கொண்ட மும்பைப் பங்குச்சந்தையில் அனைத்து நிறுவனப் பங்குகளும் லாபத்தில் நகர்கின்றன.1739 நிறுவனப் பங்குகள் லாபத்திலும், 322 பங்குகள் சரிவும், 60 பங்குகள் மதிப்பு மாறாமலும் உள்ளன

ஆட்டோமொபைல், வங்கி

நிப்டியில் பஜாஜ் ஆட்டோ, இந்துஸ்தான் யுனிலீவர், டாடா மோட்டார்ஸ், மகிந்திரா அன்ட் மகிந்திரா, இன்டஸ்இன்ட் வங்கிப் பங்குகள் லாபத்தில் நகர்கின்றன. நிப்டியில் ஆட்டோமொபைல் துறைப் பங்குகள் அதிகபட்சமாக 2 சதவீத ஏற்றத்துடன் நகர்கின்றன. அதைத் தொடர்ந்து, எப்எம்சிஜி, பொதுத்துறை வங்கி,தனியார் வங்கி, மருந்துத்துறை, நிதிச்சேவை, வங்கி ஆகிய துறைகள் சராசரியாக ஒரு சதவீதத்துக்கும் மேல் உயர்ந்த நிலையில் உள்ளன