share market today : தேசிய மற்றும் மும்பைப் பங்குசந்தைகளில் கடந்த இரு நாட்களாக சரிவு காணப்பட்ட நிலையில் இன்று காலை ஏற்றத்துடன் வர்த்தகம் தொடங்கியுள்ளது.

தேசிய மற்றும் மும்பைப் பங்குசந்தைகளில் கடந்த இரு நாட்களாக சரிவு காணப்பட்ட நிலையில் இன்று காலை ஏற்றத்துடன் வர்த்தகம் தொடங்கியுள்ளது.

சர்வதேச காரணிகள்

சர்வதேச காரணிகள் சாதகமாக இருப்பது, நிப்டியில் உள்ள 50 நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் ஆகியவற்றால் முதலீட்டாளர்கள் நம்பி்க்கையடைந்துள்ளனர்.

அமெரிக்கப் பங்குச்சந்தையான நாஷ்டாக் நேற்று ஏற்றத்துடன் முடிந்ததுஉலகளவில் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையளித்தது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் காலாண்டு முடிவு எதிர்பார்த்ததைவிட கூடுதலாக இருந்ததால், தொழில்நுட்பத்துறை பங்குகள் ஏற்றம் அடைந்தந. இந்த ஏற்றத்தின் எதிரொலி ஆசியப்பங்குச் சந்தையிலும் இருந்தது, இந்தியப் பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது.

ஆசியப் பங்குச்சந்தையில் ஏற்றம்

ஆசியப் பங்குச்சந்தையில் ஜப்பானின் நிக்கி, ஹாங்காங்,தென் கொரியப் பங்குச்சந்தைகளில் ஏற்றத்துடனே வர்த்தகம் முடிந்துள்ளது. இந்த எதிரொலி இன்று காலை இந்தியப் பங்குச்சந்தைகளிலும் காணப்பட்டது

பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடங்கும்முன்பே மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்ந்தது. இருப்பினும் மாதக்கடைசி என்பதால், எப்அன்ட்ஓ ஒப்பந்தம் முடிவதால், காலையில் ஏற்றம் இருந்தாலும் பிற்பகலுக்குப்பின் ஊசலாட்டம் இருக்கலாம் என்று சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

மும்பைப் பங்குச்சந்தையில் காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 214 புள்ளிகள் உயர்ந்து, 57,0333 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி67 புள்ளிகள் அதிகரித்து, 17,105 புள்ளிகளில் வர்த்தகம் நடந்து வருகிறது.

30 முக்கியப் பங்குகளைக் கொண்ட மும்பைப் பங்குச்சந்தையில் 5 பங்குகள் மட்டுமே சரிவில் உள்ளன. மற்ற 25 பங்குகளும் லாபத்தில் செல்கின்றன. குறிப்பாக டிசிஎஸ், ஹெச்டிஎப்சி, கோடக்வங்கி, பார்திஏர்டெல், ஹெச்டிஎல் டெக் நிறுவனப் பங்குகள் சரிவில் உள்ளன.

உலோகம் லாபம்
நிப்டியில் இந்துஸ்தான் யூனிலீவர், யுபிஎல், அப்பலோ மருத்துவமனை, ஹின்டால்கோ இன்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனப் பங்குகள் லாபத்துடன் நகர்கின்றன. ஹெச்டிஎல், பார்தி எர்டெல், பிரிட்டானியா இன்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஆட்டோ, கோடக் மந்திரா வங்கி ஆகிய நிறுவனப் பங்குகள் சரிவில் உள்ளன

தேசியப்பங்குச்சந்தை நிப்டியில் உலோகத்துறை, எப்எம்சிஜி, மருந்துத்துறை பங்குகள் நல்ல லாபத்தில் நகர்கின்றன. வங்கி, ஆட்டோமொபைல், தகவல்தொழில்நுட்பம், பொதுத்துறை வங்கி, தனியார் வங்கிப்பங்குகள் குறைவான சதவீத லாபத்தில் உள்ளன