share market today: ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கையில் வட்டிவீதம் உயர்த்தப்படாது என்ற செய்திகள் வந்ததையடுத்து, மும்பைப் பங்குச்சந்தையும், தேசியப்பங்குச்சந்தையும் காலைவர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன.

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கையில் வட்டிவீதம் உயர்த்தப்படாது என்ற செய்திகள் வந்ததையடுத்து, மும்பைப் பங்குச்சந்தையும், தேசியப்பங்குச்சந்தையும் காலைவர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கியின் 2 மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும் நிதிக்கொள்கைக் கூட்டம் இன்னும் சில மணிநேரங்களில் நடக்க இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் கடனுக்கான வட்டிவீதம் உயர்த்தப்படாது என்ற பேச்சு நிலவுகிறது. நாட்டில் பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் அளவா 6 சதவீதத்துக்கும் அதிகமாகச் சென்றபோதிலும் வட்டிவீதம் குறைக்கப்படாது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ரிசர்வ் வங்கி ஆதரவாக இருக்கும் என்ற நம்பிக்கையால் வட்டி வீதம் அதே அளவுதான் இருக்கும் என்ற கருத்து நிலவுகிறது.

இதனால் முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் சாதகமான மனநிலையுடன் காலை வர்த்தகத்தை தொடங்கியதால், மும்பை, தேசியப் பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கியது.

ஏற்றத்துடன் வர்த்தகம்

மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 240 புள்ளிகள் உயர்ந்து, 59,280 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி41 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கி 17,698 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.

மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கியப் பங்குகளில் 21 பங்குகள் லாபத்துடன் நகர்கின்றன, 9 பங்குகள் சரிவில் உள்ளன. கோல் இந்தியா, பிபிசிஎல், டாடா நுகர்வோர் பொருட்கள், ஐஓசி, அல்ட்ராடெக் சிமெண்ட் ஆகிய பங்குகள் லாபத்துடன் நகர்கின்றன. ஹெச்டிஎப்சி, சிப்லா, மகிந்திரா அன்ட் மகிந்திரா, ஹெச்டிஎப்சி வங்கி, நெஸ்ட்லே ஆகிய பங்குகள் சரிவில் உள்ளன

நி்ப்டியில் அனைத்துத் துறைகளும் சாதகமாகத் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளன. உலோகம், ஊடகம், வங்கி, தனியார் வங்கி, மருந்துத்துறை, தகவல்தொழில்நுட்பம், நிதிச்சேவை, எப்எம்சிஜி, ரியல் எஸ்டேட் ஆகிய துறைகள் ஏற்றத்துடன் உள்ளன.